
மதிப்பிற்குரிய ஆசிரியர் அவர்களுக்கு,
சற்றுமுன் தான் தாவரவியல் அறிமுக வகுப்பை முடித்துவிட்டு திரும்பினோம். 60 வயதில் இளம்மாணவியாய் உணரச்செய்த ஆசிரியை திருமதி.லோகமாதேவி அவர்களுக்கும் உங்களுக்கும் மிகுந்த நன்றி.
சூழ்ந்திருந்த பலதரப்பட்ட மாணவர்களிடம் மொத்தமாய் கண்ட ஒற்றுமை எல்லையற்ற ஆர்வமும் உற்சாகமும் தான். கற்றுக்கொள்ள இத்தனை ஆர்வம் காட்டும் ஒரு பெரும் திரளை உருவாக்கியதற்க்கு மிக மிக நன்றி.
திருமதி. லோகமாதேவியின் தாவரங்கள் மீதான ஈடுப்பட்டைச் சொல்ல, விளக்க, என்னிடம் அத்தனை வார்த்தைகள் இல்லை. தாவரவியலுkkeன்று தன்னை முழுக்க தந்தவர், இன்று எங்களுக்கும் அதை அள்ளித் தந்தார். வீட்டிற்குள்ளிருந்து எழுத்தின் மூலம் மட்டும் கண்ட பேராளுமைகளை நேரில் கண்டு உறவாட வாய்த்த்மைக்கு மீண்டும் நன்றி.
மிச்சமுள்ள காலமட்டும் கற்றுக்கொள்ள காத்திருக்கும்
D. உஷா லட்சுமி.