அன்புள்ள ஜெயமோகன்
என் அலுவலகத்தின் முன் ஆறு ஆண்டுகளாக இந்த மந்தாரை மரம் நிற்கிறது. சிறு செடியிலிருந்து மரமாக நான் பார்த்தே வளர்ந்து விட்டது. போன ஆண்டு முதல் பூ பூக்கிறது. பொதுவாக பூக்களை படம் பிடிக்கும் பழக்கம் எனக்குண்டு. சென்ற ஆண்டே படம் பிடித்து வைத்திருந்தேன். ஆனால் என்ன வகை தாவரம் என தெரியாது. இன்றும் பூ பூத்திருந்தது. பூவைப் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது இலையையும் கவனித்தேன். லோகமாதேவி அம்மா அவர்கள் வகுப்பின் பொழுது காட்டிய இலை ஞாபகம் வந்தது. இன்று தான் இது மந்தாரை என எனக்கு தெரிந்தது. ஆறு ஆண்டுகளாக மந்தாரை என தெரியாமலே பார்த்தும் புகைப்படம் எடுத்தும் வந்துள்ளேன். இது போல் இன்னும் மற்ற தாவரங்களையும் பூக்களையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் பிறந்துள்ளது. மூன்று நாள் பயிற்சி சிறந்த அனுபவமாகவும் விழி திறப்பாகவும் அமைந்தது. இப்படி ஒரு பயிற்சியை சாத்திய படுத்திய ஜெயமோகன் ஐயா அவர்களுக்கும் சிறந்த முறையில் பயிற்சி அளித்த லோகமாதேவி அம்மா அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். உங்கள் பணி மேலும் தொடர வாழ்த்துகள்.
கார்த்திக்