ஆசிரியருக்கு,
ஆழமான, அறிவார்ந்த அற்புதமான காணொளி, மோனியர் வில்லியம்ஸ் பற்றிய உங்கள் காணொளி.அறிமுகப்படுத்தியதற்கு நன்றி.வேதங்கள் தற்போதும் Rituals ஆகவே இருக்கின்றன.அதன் உண்மையை புரிந்து கொள்ளாமலேயே நாம் ஓதிக்கொண்டிருக்கிறோம்.
தயானந்த சரஸ்வதியின் ஆரிய சமாஜம், மா.ரா.ஜம்புநாதன்,போன்ற ரிஷிகளை தந்த மோனர் வில்லியம்ஸ் பற்றிய அறிவு நமக்கு தேவை.அரவிந்தர் போன்ற மகான்கள் நமக்கு இட்டுச்சென்ற பாதை மகத்தானது. Sankrit Etymology பற்றிய தங்கள் ஆய்வு உண்மை.சமஸ்கிருத அறிவு நமக்கு மிகவும் அவசியம்.காரணம் அது இந்து மறுமலர்ச்சி இயக்கத்திற்கு காரணமாக இருக்கிறதுமோனியர் வில்லியம்ஸ் ஒரு ஆங்கிலேயராக இருந்தாலும் இந்திய வேத, வேதாந்தத்தை கற்று அதை ஆராய்ந்து எழுதிய அகராதி வியப்பூட்டுகிறது.அதன் மென்பொருள் கிடைக்கிறது என்ற தகவல் மேலும் ஆச்சரியமாக இருக்கிறது. ஆக்ஸ்போர்டு பல்கலைகழகத்திற்கு நன்றி சொல்லியாக வேண்டும்.தங்களுடைய மோனியர் வில்லியம்ஸ் பற்றிய மதிப்பிற்கும் ,மரியாதைக்கும் அவருக்கு இந்தியாவில் சிலை வைத்தாலும் தகும்.தங்கள் நூலகம் ஒரு ஆலயமாக திகழ்வது குறித்து மகிழ்ச்சி.மேலும் சிறந்த படைப்புகளை பற்றி பேசுங்கள்.
தா.சிதம்பரம்.