ஆசிரியரா? கடிதம்

எழுத்தாளர் ,ஆசிரியர் ஜெயமோகனுக்கு,
நான் ஆசான் அல்ல என்பது தங்களுடைய தன்னடக்கம். எல்லா நல்ல ஆசிரியர்களும் தங்களை உலகம் என்னும் பல்கலை கழகத்தில் ஒரு மாணவனாக பாவித்து கொள்வது தன்னடக்கம். கர்நாடக சங்கீதம் நன்கு அறிந்த மலையாளப்பின்னணி பாடகர் கே.ஜே.ஜேசுதாஸ் தன்னை எப்போதும் வித்துவான் என்று அழைப்பதை விரும்ப மாட்டார் ,ஒரு வித்யார்த்தி (மாணவன்)என்றே கூறிக்கொள்வார்.நான் ஒரு பள்ளி ஆசிரியன், பல படைப்பாளிகளின் படைப்புகளை வகுப்பறைகளில் பாடமாக நடத்துபவன்.அங்கிலத்தில் Creative writing என்பார்கள்.படைப்பாளிகளுக்கும், சாதாரண எழுத்தாளர்களுக்கும் வித்தியாசத்தை வாசகர் என்ற முறையில் அறிய முடியும்.நீங்கள் உங்களை ஆசான் என்பதை ஏற்கா விடினும், உங்கள் எழுத்துக்கள் சில வாசகர்களின் மனதில் ஏற்படும் மாசுக்களை அகற்றுவதால்  நீங்களும் ஒரு ஆசிரியரே.குருவின் இலக்கணம் வேறு.Guru is one who dispels darkness ,ignorance of a student.என்பார் சுவாமி தயானந்த சரசுவதி.தன்னை அறிந்தவன் தத்துவம் அறிந்தவன் என்கிறது திருமந்திரம்.உங்கள் எழுத்துக்கள் வாசகர்களுக்கு  பாடமாக மாறும் போது  ,நீங்களும் ஒரு ஆசிரியர்தான்.ஆசான் என்பது வேறு.வகுப்பறையில் பாடம் நடத்தவில்லை ஆனால் தங்கள் எழுத்துக்கள் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்துவதால் தங்களை சதாரணமாக, சார்,(Sir)என்ற அர்த்தத்தில் ஆசிரியர் என்று அழைப்பதில் தவறு ஒன்றுமில்லை.படைப்பாளி (Creative writer),எழுத்தாளர்(Writer) என்பதைப்போல. நாவல் ஆசிரியர் .முழுமையறிவு போன்ற ஒரு அமைப்பை ஒரு ஆசிரியரால்தான் நடத்த முடியும். மன அழுக்களை அகற்றும் நீங்களும் ஆசிரியரே.தொடரட்டும் தங்கள் எழுத்துப்பணி.பதவி அல்ல.  எடுத்துக்கொண்ட பணிதான் முக்கியம்.
தா.சிதம்பரம்
முந்தைய கட்டுரைவரலாற்றைக் கற்கத் தொடங்குதல்…
அடுத்த கட்டுரைஉருது அறிமுக வகுப்பு, கடிதம்