இன்னொரு அரசியல்

அன்புள்ள ஜெ

மாற்று அரசியல் என்ற ஒன்றைப்பற்றி பேசியிருந்தீர்கள். நான் இந்த காணொளி வழியாகவே நுண் அலகு அரசியல் என்பதை புரிந்துகொண்டேன். அதைப்பற்றி நீங்கள் எழுதியவவற்றையும் வாசித்தேன். ஒரே ஒரு விஷயம் சொல்லலாம் என நினைக்கிறேன். இன்றைக்கு இணையதளங்களில் 90 சதவீதம் அரசியல்தான் பேசப்படுகிறது. எல்லாமே கட்சிகட்டல்கள் வசைகள். ஆனால் நுண்ணலகு அரசியல் பற்றி சச்சரவே இல்லை. அதுவே அது எத்தனை ஆக்கபூர்வமான ஒன்று என்பதற்கான சான்று என நினைக்கிறேன். நன்றி

ரமா ஆதவ்

முந்தைய கட்டுரைவெறுப்பு, கடிதம்