
அன்புள்ள ஜெ ,
வணக்கம்!
நான் ஆகஸ்ட் 8,9,10 தேதிகளில் நடைபெற்ற மேற்கத்திய கலை மரபு வகுப்பில் பங்கெடுத்துக்கொண்ட அனுபவத்தை இங்கு பகிர்கிறேன்.
முதலில் நான் ஏன் இந்த வகுப்புக்குச்செல்ல எண்ணினேன் என சொல்ல வேண்டும் ஒன்று,என் மகள் 1.5 வயதில், ஒரு oval வரைந்து அதனுள் 2 குட்டி வட்டங்கள் போட்டு… நடுவே ஒரு inverted triangle வரைந்து அது ஒரு ஆந்தை என்பாள். 3- 4 வயதிற்குள் ஒரு பூங்கா வரைந்து அதில் அவளுக்கு பிடித்த characters எல்லாம் வரைந்து (அதில் முக்கால் வாசி கற்பனை characters…)அவர்கள் ஒரு Tea Party இல் உள்ளனர் என்பாள். இவள் ஒரு பேப்பரும் பென்சிலும் கிடைத்தவுடன் அவள் இயல்பில் அவள் உலகத்தில் உள்ள characters …ஐ வைத்து அவர்களுக்கே உரித்தான விஷயங்களை பற்றி வரைகிறாள்… அதில் ஒழுங்கு இல்லை … எந்த perspective / proportionality தன்மைகள் இல்லை … ஆனால் நம்மை அவள் அங்கே இட்டுச்செல்கிறாள்… இது தானே ஒரு creative /ஆர்டிஸ்டிக் வெளிப்பாடு?
இது என்னை வியக்க வைக்கும் அதே சமயம் எனக்கு இன்னொரு கேள்வியும் மனதில் எழும் …. இவள் சிறு பிள்ளை என்பதால் இவள் வரையும் கிறுக்கல்களை நாமனைவரும் சிலாகித்து பேசுகிறோமோ என்று ? இவள் வளர்ந்த பின்பு இதை போலவே ஒரு ஒழுங்கற்ற தன்மையுடன் ஆனால் creative…ஆக ஏதேனும் வரைந்தால் இவுலகம் அதை ஏற்குமா? நானே அதை முன்பிருந்த கண்ணோட்டத்தில் பார்ப்பேனா ? நாம் அனைவரும் ஒரு Art என்றால் அதில் ஒரு ஒழுங்கை தேடிக்கொண்டே இருக்கிறோமே ? ஆனால் ஒரு Artwork / Creative work கட்டற்ற தன்மை அல்லவா கொண்டிருக்க வேண்டும் ? அதை perfectionism/idealism போன்ற ஜாடிக்குள் அதை அடைக்கிறோமா இது போன்ற பல கேள்விகள் என்னுள் அவ்வப்போது எழுந்து கொண்டே இருக்கும்.

பின்னாட்களில் நான் அவளை ஒரு Drawing Class..இல் எல்லாம் சேர்த்து பார்த்து விட்டேன் … ஒவ்வொவொரு நாளும் அவளை அதற்க்கு பிடித்து தள்ளாத குறை ஒன்று தான்… அத்தனை சிரமப்பட்டு செல்வாள் … அந்த வகுப்பில் நடக்கும் activities(அவை அதே perfectionism நோக்கி செல்பவை) அவள் வரைவதற்கே பெரிய தடையாக உள்ளதென உணர்ந்த தருணத்தில் இன்னும் அவளை torture ..க்கு உட்படுத்த விரும்பாமல் அவ்வகுப்பிலிருந்து அவளை நிறுத்தி விட்டேன். இப்போது அவள் தன்போக்கிற்கு வரைந்து கொண்டே இருக்கிறாள்.பின்னாட்களில் நான் அவளை ஒரு Drawing Class..இல் எல்லாம் சேர்த்து பார்த்து விட்டேன் … ஒவ்வொவொரு நாளும் அவளை அதற்க்கு பிடித்து தள்ளாத குறை ஒன்று தான்… அத்தனை சிரமப்பட்டு செல்வாள் … அந்த வகுப்பில் நடக்கும் activities(அவை அதே perfectionism நோக்கி செல்பவை) அவள் வரைவதற்கே பெரிய தடையாக உள்ளதென உணர்ந்த தருணத்தில் இன்னும் அவளை torture ..க்கு உட்படுத்த விரும்பாமல் அவ்வகுப்பிலிருந்து அவளை நிறுத்தி விட்டேன். இப்போது அவள் தன்போக்கிற்கு வரைந்து கொண்டே இருக்கிறாள்.
இரண்டாவது …. இது கோவிட் காலகட்டம். எனக்கு படம் வரைய விருப்பம் உண்டு என்பதை உணர்ந்த நாட்கள்… தினமும் ஒரு drawing வரைவேன். அப்படி துவங்கிய என் ‘கலைப் பயணம்’?! மெதுவாக என்னை ஒரு drawingclass இல் சேர இட்டுச்சென்றது. அங்கு எப்போதும் போல Beginner levelfundamental விஷயங்கள் கற்றுத்தரப்பட்டன. மெல்ல நான் வரையும் படங்கள் மெருகேற துவங்கின.. சுற்றி உள்ளோர் என்னை ஒரு பெரிய artist என்றும் ‘எங்க இருந்தீங்க இத்தனை நாளா இவ்ளோ திறமையை வெச்சிக்கிட்டு’ போன்ற தொனியில் புகழ்ந்து பேசுவர். ஆனால் ஏதோ காரணத்தினால் என்னால் என்னை அப்டி ஒரு ஆர்ட்டிஸ்ட்…ஆக உள்ளூர உணர முடிந்ததே இல்லை.
நான் வரைவெதெல்லாம் ஒரு Reference வைத்து அதை மிக தத்ரூபமாக பேப்பரில் present செய்வது மட்டுமே. இதில் என்ன artistic /creative எலிமெண்ட் உள்ளது என குழம்புவேன். இருந்த போதிலும் நான் வரைந்த ஓவியங்கள் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையே அளித்தன. அவற்றை வரையும் போது எனக்கு மிகுந்த மன அமைதி ( therapeutic effect ) உண்டாவதை நான் கவனிக்க தவறியதே இல்லை .
ஆக… என் மகளின் sketches … ஐயும் என்னுடைய படங்களையும் பார்க்கும் போது எ னக்கு பல கேள்விகள் எழுந்த வண்ணம் இருக்கும்… Art என்பது என்ன? யாரை artist என அழைப்பது? Creativity யின் அளவீடு என்ன? அதற்கு அளவீடு என்ற ஒன்றை முதலில் வைக்க முடியுமா? அப்படி வைத்தால் அதை வைக்கக்கூடியவர் யார் ? ….இது போன்ற பல கேள்விகள்.
இந்த கேள்விகளுக்கான எதேனும் விடை கிடைக்குமா என்ற நோக்கிலே நான் இந்த வகுப்பிற்கு சென்றேன்.
வகுப்பின் முதல் அமர்வில் ஆசிரியர் மணிகண்டன் சில புகழ் பெற்ற / விருதுகள் வாங்கிய புகைப்படங்களை காண்பித்தார் … எங்களிடம் அது என்ன சொல்ல விழைகிறது என கேட்ட பின் , அவை உண்மையில் என்ன சொல்லின … அவற்றின் impact உலகில் எவ்வாறாக இருந்தது என்பதை எடுத்துச்சொன்னார். Artist இன் moral responsibility பற்றி எல்லாம் விளக்கினார். அது தொடர்ந்து “What is not art ?” என துவங்கி “What is Art ?” எனக்கூறி அந்த session ..இற்கு ஒரு Break விடுத்தார் ….
அப்போது … என் மனமும் உடைந்திருந்து (Heart -Break ! ) என்றால் மிகையல்ல.
அது வரையில் நான் எதை எல்லாம் ஆர்ட் என வரைந்து வைத்திருந்தேனோ அவ்வனைத்தும் ஆர்ட்–அல்ல என்ற category..இல் சேர்ந்து விட்டிருந்தன. நான் ஒரு பென்சில்..ஐ வைத்து 50 மணி நேரமாக தீட்டி எடுத்த ஒரு படத்தை சிறு சிறு துண்டுகளாக கிழித்தது போல் உணர்தேன்…. “My whole life was a lie “….என்ற moment அது.
அந்த இடைவெளி நேரத்தில் எனக்கு பல கேள்விகள் எழுந்தன….
நான் என்னை சுற்றி பார்க்கும் Art என நம்பிய அனைத்தும் Art..டே இல்லை என்றால் பின்பு வேறெங்கு சென்று நான் Original Artworks..ஐ காண்பது? வெள்ளி மலையை தாண்டினால் இதற்கான கல்வி எங்கு கிடைக்கும்? இன்னும் பல கேள்விகள்…
பின்பு, மனதை தேற்றிக்கொண்டு சார் என்ன தான் சொல்ல வராரு பாப்போம் என்று ஒரு open mindednessஸுடன் மாலை அமர்விற்கு சென்றேன்.
அதில் 35000 வருடங்களுக்கு முந்தைய குகை ஓவியம் தொடங்கி எகிப்து கிரேக்க சிற்பங்கள் byzantine ரோமா சிற்பங்கள் என வகுப்பு சென்றது. ஒவொவொரு கால கட்டத்திலும் அதில் தொடர்புள்ள தத்துவம், மதம், அரசியல் சார்ந்த நிலைகள் மற்றும் இலக்கியம் என அனைத்தையும் connect செய்து ஒரு விரிந்த கண்ணோட்டத்தை கொடுத்தார். அந்தந்த காலகட்டத்திற்க்கே உரித்தான கேள்விகளும் பிரச்சனைகளும் எப்படி கலையில் பிரதிபலித்தது என்பதை உணர முடிந்தது.
மேலும், அந்தந்த காலகட்டத்தைச் சேர்ந்த தத்துவவாதிகளின் கோட்பாடுகளும் அவர்களின் மரபு வழியில் பொருந்தும் artist கள் மற்றும் இலக்கிய படைப்புகள் எவ்வாறு மற்ற தத்துவ மரபுடன் எப்படி மாறுபட்டும் ஒருவாறாக விவாதித்தும் கலையை அடுத்தடுத்த காலகட்டங்களுக்கு நகர்த்திச் சென்றன என ஒரு broad outline னுடன் விளக்கினார்.
இப்படியே Modernism காலகட்டத்தை வந்தடைந்தோம். அது வரை இல்லாத பல Shock ..கள் எங்களுக்காகக் காத்திருந்தன. தொடக்கத்தில் அவர் காண்பித்த பெரும்பான்மையான Modern art களும் எங்களை குழம்பவும் திகைக்கவுமே வைத்தன. மெல்ல மெல்ல ஒவ்வொரு படைப்பின் context…ஐ விளக்கிய படியே எங்களை ‘இது ஒன்றும் விளங்காத புதிர் அல்ல … இதை நாம் எப்படி அணுக வேண்டும் என்பதே முக்கியம்‘ என்ற கண்ணோட்டத்தில் யோசிக்க வைத்தார். அடிப்படையில் Modern Art ..ஐ பார்க்க என் கண்களும் மூளையும் பழகாமல் போனதே அதை புரிந்துகொள்ள தடையாக இருந்ததென உணர்தேன்.
மேலும் அவர் சில படைப்புகளை காண்பித்து அவற்றை எப்படி புரிந்து கொள்வது என்பதை எங்களிடம் கேள்விகள் கேட்டு அதற்கான விடைகளிலிருந்து எங்களுக்கு புரியவைத்தார். இது ஒரு நல்ல பயிற்சியாக இருந்தது.
குறிப்பாக Post Modernism & Post-Post Modernism காலகட்டத்தை சேர்ந்த படைப்புகள் என்னை மிகவும் ஈர்த்தன.
Art என்பது ஓவியம், சிற்பம் மட்டுமன்றி ‘Presence’, ‘Happenings’ போன்ற பரிமாணங்கிளிலும் இருக்கலாம் என தெரிந்து கொண்டோம்.
முதன்மையாக John Cage என்பவரின் படைப்பு…. அந்த படைப்பின் நோக்கத்தை ஆசிரியர் விளக்கிய போது எனக்குள் உண்டான “Self realization” moment ஒரு meditative experience என்றே கூற முடியும். Art எத்தனை Powerful..ஆன medium என்பதையும் சேர்த்தே உணர்தேன்.
இது போலவே அமெரிக்காவில் Nancy Holt என்ற பெண் கலைஞர் பாலைவனம் போன்ற பகுதியில் Tunnel கள் arrange செய்து அதில் பிரபஞ்ச தரிசனத்தை உணரச்செய்துள்ளார்.
Cut piece என்ற மற்றொரு படைப்பில் Yoko Ono என்ற பெண், சமூகத்தின் விளிம்புநிலையில் (Vulnerable..ஆக) உள்ளோருக்கு இழைக்கப்படும் அநீதிகள், அதை செய்யக்கூடுவோரின் உளநிலை மீது கவனத்தை ஈர்க்கவும் மற்றும் ஒரு exploitation நடக்கும் போது power என்பது யாரிடம் உள்ளது போன்ற narrative..களை Self-reflection வழியே உணர்த்த மிகவும் நுட்பமாக தன் படைப்பை செய்துள்ளார். ஆசிரியர் இதை விளக்கிய போது என்னை அறியாமல் கண்கலங்கிவிட்டேன்.
இது போன்று இன்னும் பல பல படைப்புகள் discuss செய்யப்பட்டன.
முடிவில் Modern Art …ஐ வெறும் ‘ஊரை ஏமாற்றும் வேலை மட்டுமே’ என எண்ணிக்கொண்டிருந்த என்னை அதை relatable …ஆக உணரவும் appreciate செய்யவும் இந்த இரண்டரை நாள் வகுப்பு மாற்றிவிட்டது.
இது தவிர இவ்வகுப்பின் மூலம் எனது ஒட்டுமொத்த உலகப்பார்வையும் வாழ்க்கைப்பார்வையும் மேம்பட்டு இருப்பதும் , என்னுடைய கேள்விகளுக்குமான விடைகளை ஒருவாறாக புரிந்து கொண்டேன் என்பதும் மனநிறைவை அளிக்கிறது.
மேலும் என்னை போன்ற சபை கூச்சம் மற்றும் தயக்கம் கொண்ட ஒருத்தியால் வகுப்பில் ஒரு “Non – Judgmental atmosphere… ஐ ” உருவாக்கியதன் மூலம் , interactive conversation…களில் தயக்கங்களை தவிர்த்து பங்கெடுக்க முடிந்தது. அப்படியான ஒரு சூழலை அமைத்ததற்கு எனது உளமார்ந்த நன்றிகளை ஆசிரியர் மணிகண்டன் அவர்களுக்கு சொல்லியே தீர வேண்டும்.
இப்படி ஒரு Holistic approach…சுடன் வெவ்வேறு வகுப்புகளை ஒருங்கிணைத்து எங்கள் கற்றலையும் சிந்தனையையும் மேம்பட வழிவகுத்துக் கொடுக்கும் தங்களுக்கு நன்றிகள் பல.
நன்றி என்ற ஒற்றை வார்த்தை போதவே போதாது தான்!
– மேகலா
பி.கு.
என் கல்லூரி நாட்களுக்கு பிறகு(~25yrs) இத்தனை தமிழ் வார்த்தைகள் கொண்ட ஒரு பத்தியை இப்போது தான் எழுதுகிறேன். என் சிந்தனை மொழி முற்றிலுமாக தமிழ் ஆங்கிலம் கலந்த Tanglish..லேயே உள்ளதால் , இதை முற்றிலும் தமிழில் எழுத சிரமமாக இருந்தது. இந்த தடையை எப்படியாவது கடக்க வேண்டும் என்ற எண்ணத்தில் முடிந்த வரை முயற்சித்துள்ளேன். இதிலுள்ள குறைகளையும் ஆங்கில வார்த்தை பிரயோகங்களையும் தயவு கோர்த்து பொறுத்தருள்க என கேட்டுக்கொள்கிறேன்.
மேகலா