வடகிழக்கை நம்மிடம் மறைப்பது யார்?

அன்புள்ள ஜெ,

வடகிழக்கும் இனவாதமும் பேச்சை வாசித்தேன். இங்கே தமிழகத்தில் பெரும்பாலானவர்களுக்கு வடகிழக்கின் இனவாதச்சூழல் பற்றி அனேகமாக எதுவுமே தெரியாது. ஆனால் இங்குள்ள ஏதோ ஒரு கூட்டம் வடகிழக்கைப் பற்றி ஒரு குறிப்பிட்ட சித்திரத்தை தொடர்ச்சியாக உருவாக்கிக்கொண்டே இருந்தது. அங்குள்ள இனப்பூசல்களை விடுதலைப்போராட்டமாக சித்தரித்தவர்கள் அவர்கள்தான். ஐரோம் ஷர்மிளாவை புகழ்ந்து இருபதுக்கும் மேல் புத்தகங்கள் தமிழிலே வெளிவந்துள்ளன, ஆனால் மணிப்பூரின் எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள், கலைஞர்கள், அரசியல் தலைவர்கள் பற்றி ஒரு வரி கூட எழுதப்பட்டதில்லை என்று சொல்கிறீர்கள். அது உண்மை அந்த சக்தி என்ன என்று நீங்கள் சொல்லியிருக்கவேண்டும். அதுதான் நாம் அறிந்தாகவேண்டிய மறைக்கப்படும் உண்மை.

ஆர். ஷண்முகம்

முந்தைய கட்டுரைகீழடியும் எகிப்தும்
அடுத்த கட்டுரைஆலயங்கள், மகத்தான வகுப்பு