Stories Of The True, USA, பரப்புரைகள்
அன்புள்ள ஜெயமோகன்,
பத்மாலட்சுமி என்னும் சுப்பர் மாடல் அமெரிக்காவில் உங்கள் நூலை பரிந்துரைப்பதைக் கண்டேன். (பார்க்க பத்மா லக்ஷ்மி இன்ஸ்டா பதிவு)
நாம் முதலில் புரிந்துகொள்ளவேண்டிய ஒன்று உண்டு. இந்தியாவில் அப்படி எந்த மாடல் ஆவது எப்போதாவது ஒரு ‘சீரியஸ்’ இலக்கிய நூலை அப்படி பரிந்துரைத்தது உண்டா? அவர்கள் வாழும் உலகம் முழுக்கமுழுக்க அறிவார்ந்த உலகத்துக்கு அப்பால் மட்டும்தான் உள்ளது இல்லையா? இங்கே உள்ள சுப்பர் மாடல்கள் என்றால் நடிகர்கள், நடிகைகள்தான். அவர்களுக்கு அறிவுச்செயல்பாடு என்ற ஒன்று இங்கே நிகழ்கிறது என்ற தகவலே தெரியாது. அவர்கள் ஃபேஷன் தவிர எதுவுமே தெரியாதவர்கள். அரசியல் கூட தெரியாமல்தான் இருக்கிறார்கள். ஆகவேதான் நமக்கு இந்த விஷயம் ஒரு குழப்பத்தை அளிக்கிறது. இங்கே அந்த ஃபேஷன் உலகை மட்டுமே கவனிக்கும் இளைஞர்களுக்கும் இலக்கியம் அறிமுகமே இல்லை. ஆனால் நாம் பார்க்கும் வளர்ந்த நாடுகளில் வாழ்க்கையின் எல்லா தளங்களிலும் வாசிப்பும் அதுபற்றிய இயல்பான உரையாடலும் இருக்கிறது. அதுதான் நாம் கவனிக்கவேண்டியது.
ராஜ் மகாதேவன்