ரிஷிகள் எதையும் உருவாக்கவில்லையா?

அன்புள்ள எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு,

உங்களுடைய காணொளிகளை பார்க்கும்போது வரும் ஒரு சந்தேகம் எனக்கு உள்ளது. அதில் தொன்மையான குகை ஓவியங்கள், குகை மனிதர்களின் பாறை ஓவியங்கள் ஆகியவற்றில் நம்முடைய மெய்ஞானத்தின் அடிப்படைகள் அனைத்துமே அடங்கி உள்ளன என்று நீங்கள் திரும்பத் திரும்பச் சொல்கிறீர்கள். நான்கைந்து காணொளிகளில் குகை ஓவியங்களிலேயே சிவன் விஷ்ணு போன்று தொடக்கங்கள் இருப்பதை காட்டியிருக்கிறீர்கள். அது உண்மை என்றால் நம்முடைய ரிஷிகள் எதையுமே புதிதாக கண்டடையவில்லை என்றுதானே அர்த்தம் ?அவர்கள் உடைய ஞானத்திற்கு எந்த மதிப்பும் இல்லை என்றுதானே சொல்ல வேண்டும்?  சித்தர்களும் முனிவர்களும் அப்படியானால் செய்த பங்களிப்புதான் என்ன?

அ.ஞானசேகர்.

அன்புள்ள ஞானசேகரன்,

மெய்ஞானம் என்பது ‘கண்டறிதல்’தானே ஒழிய ‘உருவாக்குதல்’ அல்ல. இங்கு எப்போதுமே இருந்து கொண்டிருக்கும் ஒன்றே மறுகண்டடைவுதான் நாம் செய்து செய்கிறோம். அதைத்தான் ரிஷிகளோ முனிவர்களோ செய்தார்கள். அவர்களது உண்மைகளை அவர்கள் உருவாக்கவில்லை. அப்படி உருவாக்கி இருந்தால் அது உண்மையல்ல, கற்பனை என்றுதானே பொருள்? எப்போது மனிதச சிந்தனை தோன்றியதோ அப்போதே தோன்றிய ஒன்றாகவே அடிப்படைத் தரிசனங்கள் அனைத்தும் இருக்க முடியும்.

ஜெ

முந்தைய கட்டுரைசைவம் அறிந்து நெகிழ்ந்து…