பறவைகளின் குழந்தைகள்

வணக்கம் சார்,

நான்காவது பறவைகள் பார்த்தல் வகுப்பு சிறப்பாக நடந்து முடிந்தது. களத்துக்கு செல்லும்போது கோவில் திருவிழா சத்தம் அதிகமாக இருந்ததால் இரண்டு முறை கார்களில் மடம் வரை சென்றோம். அங்கும் நிறைய பறவைகள் பார்க்க முடிந்ததில் அனைவரும் மகிழ்ந்திருந்தனர். ஒருசில படங்களை இணைத்துள்ளேன்.

இம்முறை அதிகம் நபர்கள் கலந்துகொண்டதால் அன்பரசியை அழைத்துவந்தது உதவியாக இருந்தது

குழந்தைகள் இயற்கையை அவதானித்த தருணங்களை குறிப்புகளாக பதிவுசெய்யும் வகுப்பும் எடுத்தோம். அதில் குழந்தைகள் வரைந்த சில படங்களையும் ஒன்றிணைத்து ஒரு படமாக அனுப்பியுள்ளேன்

நன்றி

விஜயபாரதி , ஈஸ்வர், அன்பரசி 

முந்தைய கட்டுரைரிஷிகள் எதையும் உருவாக்கவில்லையா?