பிரபஞ்சமும் நம் வாழ்வும், கடிதம்

அன்புள்ள ஜெயமோகன்,

உங்கள் காணொளிகளில் நான் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு விஷயம் உங்களிடம் வெவ்வேறு தரப்பிலிருந்து உரையாடிக் கொண்டே இருக்கிறார்கள் என்பதுதான் .உங்களுக்கு அவரிடம் சொல்வதற்கு நிறையவே இருக்கிறது. உங்களுடைய பார்வையை முன்வைக்கிறீர்கள். ங்கள் பார்வையை விரிவாக்கம் செய்யும்பொருட்டு நீங்கள் செய்து கொண்டிருக்கும் பயணங்களும் அதில் தெரிகின்றன.

நீங்கள் வேதாந்தத்தை ஒரு நம்பிக்கையாகவோ ஒரு கருத்துத் தரப்பாகவும் எடுத்துக் கொள்ளவில்லை. அதை உங்கள் அனுபவமாக ஆக்கிக் கொள்ள முயற்சிக்கிறீர்கள். இத்தனை நீண்ட பயணங்களை எதற்கு மேற்கொள்கிறீர்கள்? ஏன் தொன்மையான பாறைக்குடைய ஓவியங்களை எல்லாம் பார்க்க சென்று கொண்டிருக்கிறீர்கள்? அவற்றை எண்ணி நான் முன்பு ஆச்சரியப்பட்டேன். ஆனால் அத்வைதத்தின் தரிசனத்தை உங்கள் சொந்த அனுபவமாக ஆக்கிக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே அந்த பயணம் என்று காணொளிகளில் வழியாக கண்டுபிடித்தேன்

தொன்மையான பாறைகளில் இருந்து இன்று வரைக்கும் தொடர்ந்து வருவது என்ன என்று பார்க்கிறீர்கள். அந்தத் தொடர்ச்சி என்பதுதான் அழியாத மெய்ஞானமாக இருக்கும். அது உங்கள் அத்வைத ஞானத்துடன் எந்த அளவுக்கு இணைந்து செல்கிறது என்று பார்க்கிறீர்கள். அத்வைதத்தின் மீதான உங்களுடைய  அனுபவப் பார்வையேஒழிய பக்தி சார்ந்த பார்வை அல்ல.

நான் நீண்ட காலம் நாத்திகனாக இருந்தேன். அதன் பிறகும் ஆத்திகனாக மாறவில்லை. ஆனால் இந்த பிரபஞ்சத்தை அத்தனை எளிதாக புரிந்து கொள்ள முடியாது என்ற எண்ணத்தை அடைந்தேன். பிரபஞ்சத்தை விளக்குவதற்கு அறிவியலுக்கு சில வழிகள் உள்ளன .ஆனால் அறிவியல் பிரபஞ்சத்தை அறிய முடியாது என்றும் அறிவதற்கான ஒரு பயணம் மட்டுமே நமக்கு முடியும் என்றும் சொல்கிறது.

பிரபஞ்சத்தின் ஏதேனும் ஒரு ரகசியத்தை நாம் அறிந்து கொண்டால் தான் நம்முடைய வாழ்க்கையின் ரகசியம் நமக்கு தெரியவரும்.நம அருகே இருக்கக்கூடிய ஒன்றிலிருந்துதான் பிரபஞ்சத்தை புரிந்து கொள்ள முடியுமே ஒழிய முடிவிலாது விரிந்து கிடக்கும் பிரபஞ்சத்தின் எல்லை வரைக்கும்சென்று அதை நம்மால் புரிந்து கொள்ள முடியாது.

நம் அருகே நிகழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கையை வைத்துப் பார்க்கையில் இவை அனைத்தையும் இணைக்கும் ஒரு மையச் சரடு உண்டு என்று எண்ணம் ஏற்படுகிறது .அதுவே பிரபஞ்சத்திற்கும் என்று விரித்துக் கொள்ள முடிகிறது .நான் உணர்ந்தவரை என்னுடைய ஆத்திகம் என்பது இவ்வளவுதான். இது ஒரு வகையில் நம்மை ஒரு பிரம்மாண்டத்திற்கு முன்நால் கொொொண்டு வைப்பது .அந்த பிரம்மாண்டத்தின் ஒரு பகுதியாக நம்மை எண்ணிக் கொள்வது .நம்மை ஒப்புக் கொடுப்பது .அது நமக்கு ஒரு மகத்தான விடுதலையை அளிக்கிறது. அதைத்தான் உங்களுடைய வ்ழியாகவும் கண்டு கொண்டேன் .நம்மிடையே பொதுவான நிறைய விஷயங்கள் இருக்கின்றன. என்றாவது நாம் சந்திப்போம்

ஜெகநாதன்

முந்தைய கட்டுரைபறவைகளின் குழந்தைகள்