
அன்பிற்கினிய ஜெ,
நலம் விழைகிறேன்,கடந்த சில நாட்களாக தத்துவம் பயிலவேண்டும் என்ற ஆர்வம் மேலோங்கியிருந்தது ஆனால் வெகு நாட்களாக தத்துவ அறிமுக வகுப்புகளும் நடக்கவில்லை, அதனால் தேவி பிரசாத் சட்டோபாத்யா வின் இந்திய தத்துவம் அறிமுகம் நூலை வாசிக்க முயற்சித்தேன். ஆனால் பல பகுதிகள் விளங்கவில்லை. அதனால் உங்களுடைய இந்து ஞான மரபின் ஆறு தரிசனங்கள் வாசித்தேன். மேலும் விஷ்ணுபுரத்தின் பல பகுதிகள் விளங்க வேண்டுமென்றால் தத்துவம் பயில வேண்டும்.
கடந்தமுறை நடந்த பொழுது தவறவிட்டு விட்டேன்.
தயவு செய்து மீண்டும் ஒருமுறை தத்துவ அறிமுக வகுப்பு நடத்த வேண்டுகிறேன்.
நிசார் சவூத்
அன்புள்ள நிஸார்
தத்துவத்தை நூல்கள் வழியாக கற்பது மிகக்கடினம். கற்றபின் நூல்களை மேற்கொண்டு பயன்படுத்துவதே வழக்கம்.
தத்துவ முதல்வகுப்பை தொடங்க பலர் கோரிவருகிறார்கள். ஆனால் தொடர்ந்து நிகழவேண்டிய வகுப்புகள் எல்லாமே நிலுவையிலுள்ளன. ஆகவே யோசிக்கிறேன். ஜனவரியில் இந்திய தத்துவ முதல் நிலை அறிமுக வகுப்புகள் ஆங்கிலத்தில் நடத்தப்படுகின்றன. நான் நடத்துகிறேன். அடுத்த தமிழ் முதல்நிலையை மே அல்லது ஜூனில்தான் யோசிக்கமுடியும்.
ஜெ












