பறவைபார்த்தல் வகுப்புகள்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

உங்கள் தளத்தில் பறவை பார்த்தல் நிகழ்ச்சிகள் டிசம்பரில் நிகழ்வதாகச் செய்தி அறிந்து எழுதினேன். அது தவறான செய்தி என்று சொன்னீர்கள். பறவை பார்த்தல் நிகழ்ச்சிகள் அடுத்தபடியாக எப்போது நிகழவுள்ளன என்று தெரிந்துகொள்ளலாமா?

ஆர். பிரவீண்

அன்புள்ள பிரவீண்,

டிசம்பரில் பறவை பார்த்தல் நிகழ்ச்சி என்பது தவறாக வந்த பழைய செய்தி.  டிசம்பரில் லோகமாதேவி நடத்தும் தாவரவியல் வகுப்புகள் நிகழ்கின்றன.

ஆனால் ஜனவரியில் பொங்கல் விடுமுறையை ஒட்டி பறவைபார்த்தல் வகுப்புகள் நிகழவுள்ளன. ஜனவரி 16 17 மற்றும் 18. நிகழ்ச்சி அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போதே விண்ணப்பிக்கலாம். contact [email protected]

பறவைபார்த்தலுக்கு பொங்கல் காலகட்டம் மிக உகந்தது. குளிர்காலத்தின் முடிவு. அரசு அறிவித்துள்ள பறவைக் கணக்கெடுப்பும் அதே தேதிகளிலேயெ நிகழ்கின்றன. பலவகையான பறவைகள் வரும் காலகட்டம் அது.

பறவை பார்த்தல் சிறார்களை இணையமோகத்தில் இருந்து விடுவிக்கும் ஆற்றல் கொண்டது. நேரடியாக காட்டுப்பகுதியில் நிகழும் பறவை பார்த்தல் நிகழ்வு மட்டுமே அந்த வாய்ப்பு கொண்டது. அது இயற்கையுடன் ஒன்றியிருப்பதற்கான தியானமும்கூட

ஜெ

முந்தைய கட்டுரைதர்க்கபூர்வ சிந்தனை, சட்டம் செயல்படும் முறை- ஒரு வகுப்பு