அன்புள்ள ஜெ,
திருவிழா கொண்டாட்டங்கள் ஆரம்பமாகிவிட்டன, அந்தக்கொண்டாட்டங்களில் மகிழ்ந்து இசையோடு இயைந்தாடும் துள்ளல் மனநிலைக்கு காலம் கனிந்து வந்தாகிவிட்டது. சிறந்த எழுத்தாளர்கள் கலந்துக்கொள்ளும் தமிழர்களின் எழுத்தை உலகுக்கு எடுத்துரைக்கும் சிறப்பான ” வாழும் தமிழ் இலக்கியவிழாவின் விருந்தினர்களின் அறிமுகம் ஆரம்பமாகிவிட்டது.
இந்த நிகழ்வை இன்னும் இன்னும் அதீத கவனத்தோடும் உற்சாக மனநிலையோடும் ஒரு திருவிழாவினைப் போல அனைவரும் பங்கேற்று கவனித்து சிறப்பு செய்யவேண்டியது அனைவரது கடமை.இது ஒரு ஆரம்பம் மிகப்பெரிய முயற்சி உங்கள் செயல் மிகவும் வாழ்த்துதலுக்கு உரியது எத்தனை வார்த்தைகளில் அதைக்குறிப்பிட்டாலும் அந்த வார்த்தைகளில் அடக்கிவிட முடியாதது.இன்னும்இது தமிழின் வளர்ச்சியாக ஆண்டாண்டு காலங்கள் உலகத்தின் தொடர்ச்சியான ஒரு விழாவாக இது தொடர , தமிழ் எழுத்தாளர்களின் புகழ் உலகெங்கும் தெரிவதற்கு இது ஒரு தொடக்கமாக அமையட்டும். இயற்கை பெருஞ்செயல்களுக்கு எப்பொழுதும் துணைநிற்கும் . இனிய வாழ்த்துக்கள்
அன்புடன்
தேவிலிங்கம்










