
அன்புள்ள ஜெ,
கடந்த வாரம் நடந்த விபாசனா பயிற்சியில் கலந்து கொண்டேன். இந்த பயிற்சிகள் நான் தொடர்ந்து செய்து கொண்டும் இருக்கிறேன். நான் இதற்கு முன்பும் சில பயிற்சிகளை கடந்த சில வருடங்களாக செய்கிறேன். அமலன் அவர்களின் புத்தகங்கள் சிலவற்றை படித்திருந்ததாலும், என் மனைவி அவருடைய மாணவி என்பதாலும் அவரிடம் தியானம் பயில ஒரு ஆர்வம் இருந்தது. இருந்தாலும் ஏற்கனவே செய்யும் பயிற்சிகளை ஒரு இரண்டு வருடமாவது செய்து விட்டு அடுத்தது செய்யலாம் என்று இது நாள் வரை தள்ளி வைத்து வந்தேன். இப்பொழுது அந்த நேரம் சரியாக அமைந்ததால் கலந்து கொண்டேன்.
இந்தபயிற்சிவகுப்பின்முதல்நாள்அன்றுநான்ஏன்இங்குவந்தேன்என்பதுபோல்தான்இருந்தது. அன்றைய நாளைய பயிற்சிகள் மிகவும் அருவமாகவும், ஒரு பிடிமானம் இல்லாதது போலவும் இருந்தது. பிறகு இரண்டாம் நாளில் இருந்து இவை கொஞ்சம் கொஞ்சமாக எனக்கு புரியவும் மூச்சில் நிற்கவும் முடிந்தது. இந்த பயிற்சிகளுடன் அவற்றை தத்துவார்த்தமாக உள்வாங்கி கொள்ள அவர்கள் ஆற்றிய உரைகள் அந்த பயிற்சியுடன் புரிதலுடன் கூடிய அனுபவமாக உள்ளுக்குள் சென்றது.
இந்தபயிற்சியைநான்இப்பொழுதுதொடர்ந்துசெய்வதற்குமிகமுக்கியகாரணம்நான்செய்யவேண்டும்என்றுஉட்கார்ந்ததும்அதுவேஎன்னைகூட்டிசெல்வதுதான். இது நாள் வரையிலும் என்னால் அரை மணி நேரம் உட்காருவது என்பது மிக கடினம் என்று தான் நினைத்தேன், ஆனால் இப்பொழுது மிகவும் எளிமையாக அதில் இருக்க முடிகிறது. அதே போல் இந்த பயிற்சியின் போது மனம் வேறு எண்ணங்களுக்கு செல்வதை ஆசிரியர் சொல்வதை போல் அதை சாதாரணமாக எடுத்து கொண்டு அதையும் கவனிக்க சொன்ன விஷயம் எனக்கு மிக இலகுவாக திரும்பி பயிற்சியில் கவனம் செலுத்த உதவுகிறது. கட்டுகளும் முத்திரைகளும் இல்லாமல் நம்மை நாமே பார்க்கும் தருணங்கள் இந்த பயிற்சியில் மிக முக்கியமான விஷயம்.
ஆசிரியர்ஒரேநேரத்தில்கவிஞர்ஆகவும்ஆராய்ச்சியாளர்ஆகவும்வெளிப்படுகிறார். கவிஞர் ஆக வெளிப்படும் தருணங்களில் அவர் கவித்துவமான கவிதைகளையும் கதைகளையும் சொல்லி நம்மை வேறு ஒரு தளத்திற்கு கொண்டு செல்கிறார், அதை பயிற்சியின் போதும் உபயோகப் படுத்துகிறார். அதே சமயம் ஆராய்ச்சியாளர் ஆக இன்னின்ன விஷயங்கள் செய்தால் இந்த பலன் கிடைக்கும் என்று தெளிவாக வெளிப்படுத்துகிறார். இதை போன்ற வாய்ப்பு அமைவது மிகவும் கடினம், அமைத்து கொடுத்தமைக்கு என் நன்றிகள்!
நன்றி,
அருண் ஆனந்த்.S












