அன்புள்ள ஜே,
உங்கள் காணொளியில் ஏன் உங்களை வெறுக்கிறார்கள் அல்லது வசை பாடுகிறார்கள என்பதை பற்றி சொல்லியிருந்தீர்கள். பெரும்பாலான வசைப்பாடிகள் எதையுமே பெரும்பாலும் படித்திருப்பதில்லை என்பதை நான் கண்டு இருக்கிறேன். நீங்கள் அவர்களுக்கு பெரும்பாலும் அன்றாடச் செய்திகள் வழியாக அல்லது தொடர்ந்து எப்போது வந்து கொண்டிருக்கும் வம்புகள் வழியாகத்தான் சென்றடைகிறீர்கள். இப்போது உங்களை வசைபாடும் பலர் வைரமுத்துவை நீங்கள் எதிர்த்தீர்கள் என்பது வழியாகத்தான் உங்கள் பெயரை கேள்விப்பட்டிருக்கிறார்கள.
உடனடியாக சமூக வலைத்தளங்களில் தேடும்போது மக்கள் கண்டடைவது உங்களை வசைபாடி இருப்பவர்களின் குரல்களைத்தான் .ஏனென்றால் இன்றைய ஃபேஸ்புக் லாகிருதம் வசைபாடல்களைத்தான் அதிகமான ஆட்களிடம் காட்டுகிறது. வசைகளைத்தான் அதிகமானவர்கள் பகிர்கிறார்கள். அதாவது ஒருவர் தனக்கு பிடித்த எழுத்தாளரை பற்றிய ஒரு பாரட்டு கண்ணில் பட்டால் அதை உடனடியாக அனைவருக்கும் பகிர்வதில்லை. ஆனால் ஒருவர் தனக்கு பிடிக்காத ஒரு எழுத்தாளரை பற்றிய வசை காதில் விழுந்தால் உடனடியாக அதை ஒரு குறைந்தது 100 பேருக்காக பகிருகிறார். ஆகவே ஒவ்வொருவரும் தங்கள் எதிரிகளைப் பற்றிய செய்திகளைத்தான் பரப்பி கொண்டே இருக்கிறார்கள். ஆக அதிகமாக பரவி அதிகமாக முகநூல் கட்டுபவை வசைகள்தான்.
இன்று எல்லாவற்றையும் பற்றி ஏதேனும் அறிந்திருக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. ஆகவே இந்த வசைகளிந் வழியாக ஒரு எளிய சித்தரத்தை உருவாக்கிக்கொண்டு அதைச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களிடம் நீங்கள் எதையாவது படித்து பார்த்திருக்கிறீர்களா என்று நான் கேட்டால் அதற்கு பதில் சொல்ல முடியாது. ஆனால் அவர்கள் அதைப்பற்றி கவலைப்படுவதுமில்லை. வசைகளை வாசிப்பது, கருத்து சொல்வது, போய்க்கொண்டே இருப்பது- அவ்வளவுதான்.
அண்மையில் கூட உங்களுடைய இணைய முகநூல் பக்கத்தில் ஒருவர் கமெண்ட் போடும் போது உங்களுடைய எழுத்து முற்போக்குத்தன்மை கொண்டதுதானா என்று கேட்டிருந்தார். நீங்கள் அறம் படித்திருக்கிறீர்களா என்று கேட்டேன். ஒரு குறிப்பை நான் அவருக்கு தனிப்பட்ட முறையில் அனுப்பினேன். அவர் எதையுமே படித்திருக்கவில்லை. நீங்கள் பிராமணக் கருத்துக்களையும் மதரசார்ந்த கருத்துக்களை எழுதிக் கொண்டிருக்கும் ஒரு பிற்போக்காளார் என்று அவர் நினைக்கிறார். உங்கள் நூல்களின் பெயர்களை அவருக்கு தெரியவில்லை. நான் கேட்ட பிறகாவது பார்ப்பார் என்றால் பார்க்க மாட்டார்.
இந்த வகையான ஒரு பெரும் கும்பல் எல்லா காலகட்டத்திலும் இருக்கும். எல்லா காலகட்டத்திலும் எல்லா சிந்தனைகளையும் இவர்கள் எதிர்த்து கொண்டுதான் இருந்திருக்கிறார்கள். நீங்கள் குறிப்பிடுவது போல இவர்கள் நிகழ்காலத்திலும் இறந்த காலத்திலும் வாழ்பவர்கள். எதிர்காலத்தை இவர்களால் ரிந்து கொள்ள முடியாது .இவர்களை தவிர்த்து விட்டு முன் செல்வது மட்டும் தான் நாம் செய்யக்கூடிய ஒரே வழியாக இருக்கமுடியும்.
எம்.லட்சுமணன்










