அன்புள்ள ஜெயமோகன்,
உங்கள் முழுமை அறிவு சார்பில் நிகழத்தப்படும் தத்துவம் மற்றும் கலைப் பயிற்சி வகுப்புகளை பற்றி கேள்விப்பட்டு கொண்டிருந்தேன். இப்போது பறவைகள் பார்த்தல், தாவரங்களை பார்த்தல், ஓவியம் போன்ற குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகளை நீங்கள் ஒருங்கிணைப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இன்றைய சூழலில் இயற்கை இடத்தில் குழந்தைகளை கூட்டி அவர்களுக்கு அவர்களே செய்து கற்றுக் கொள்ளும் எதையேனும் ஒன்று கற்றுக் கொடுப்பது மிக அவசியமான ஒன்றாக இருக்கிறது. இணையத்தில் குழந்தைகள் தங்களை தொலைத்து விடாமல் இருப்பதற்கான ஒரே வழி அவர்களை இயற்கையுடன் இணைத்து விடுவது தான்.
என்னைக் கேட்டால் பறவை பார்த்தல் போன்ற வகுப்புகளை நீங்கள் எல்லா மாதமும் தொடர்ந்து நிகழ்த்தலாம் என்று தோன்றுகிறது. விடுமுறைகளை பற்றி கூட கவலைப்பட வேண்டியது இல்லை. முடிந்த வரைக்கும் மாதம் ஒருமுறையாவாது இத்தகைய வகுப்புகளை நடத்தாம்.ஒருநாள் விடுமுறை எடுத்துக்கொண்டு கூட குழந்தைகள் கலந்து கொள்ளலாம். மூன்று நாட்களுக்கு பதிலாக இரண்டு நாட்கள் நடத்தினால் சனி, ஞாயிறு மற்றும் நடத்தினால் குழந்தை அல்லது கலந்து கொள்ளவும் முடியும். அல்லது தேசிய விடுமுறை நாட்களை ஒட்டி அமைக்கலாம்.
இந்த வகையான வகுப்புகள் வழியாக குழந்தைகளின் கவனம் மிகப்பெரிய அளவிலே இன்றைய இணைய விளையாட்டுகள், கணினி விளையாட்டுகளில் இருந்து வெளியே செல்வதையும் அவர்கள் கற்பனையும் கவனிக்கும் திறனை அடைவதையும் உலகம் முழுக்க கல்வியாளர்கள் கண்டு பதிவு செய்து கொண்டிருக்கிறார்கள் .இவ்வகை நிகழ்வுகளைள்ளி சார்ந்து ஏற்பாடு செய்யும்போது குழந்தைகளுக்கு ஒரு சலிப்பு வருகிறது. மேலும் அத்தகைய பெரிய எண்ணிக்கையிலான குழந்தைகளை இயற்கை சார்ந்து கொண்டு சென்று பயிற்சி கொடுப்பது சாத்தியமும் அல்ல. ஆகவேஇத்தகைய சிறிய நிகழ்வுகள் தான் மிகவும் முக்கியமானவை. இவற்றை தொடர்ந்து நிறுத்த வேண்டும் என்று உங்களை கேட்டுக்கொள்கிறேன்.
எஸ்.ஐசக்ராஜ்










