செயல், ஒரு கேள்வி

அன்புள்ள ஜெ

செயல்படுவதற்கான சிறந்த வழி என்ன என்ற காணொளியை பார்த்தேன். நான் ஈடுபட்டிருக்கும் துறையில் எனக்கு திறமை இருக்கிறதா என்ற சந்தேகம் எனக்கு இருக்கிறது. என் செயல்கள் எனக்கு திருப்தி அளிக்கவில்லை .ஒவ்வொருமுறை அதில் ஈடுபடும் போது சோர்வு தான் வருகிறது. அதை மேம்படுத்திக் கொள்வதற்கு என்ன வழி? எப்படி என்னை தீவிரமாக செயலாற்றும்படி நான் ஆக்குவது? திருமப்த் திரும்பச் செய்வது நல்ல வழியா?

ஆ.ராஜகோபால்

அன்புள்ள ராஜகோபால்,

செயல்களை திரும்பத் திரும்ப செய்வதென்பது அவற்றை கச்சிதமாக ஆக்குகிறது என்பது ஒரு உண்மை. ஆனால் சலிப்பு இல்லாமல் செயல்படும் ஒரு செயல் ஏதோ ஒரு வகையில் அந்தச் செயலை படைப்புத்தன்மை இல்லாமல் ஆக்குகிறது. அதன் மகிழ்ச்சி இல்லாமல் ஆகி விடுகிறது. அந்த செயலை கூர்ந்து கவனித்து ஒவ்வொரு முறையும் சிறு வேறுபாடு ஒன்றை உருவாக்கிக் கொள்வதன் வழியாகத்தான் அந்த செயலை திரும்பத் திரும்பச் செய்ய முடியும். செயல் ஒன்றுதான் சிந்தனையையும் செயல்பாடுகளையும் மேம்படுத்தி கொள்வதற்கான வழி. வெறும் சிந்தனை செயல் அல்ல.

ஜெ 

முந்தைய கட்டுரைபணத்தின் மதிப்பு, கடிதம்.