தகுதி, கடிதம்

 

அன்புள்ள ஜெ,

தகுதிக்கு ஏற்ப அங்கீகாரம் இல்லை என்பது பெரும்பாலானவர்கள் தங்களுக்கு தாங்களே போட்டுக் கொள்ளும் ஒரு வேடம் என்று நினைக்கிறேன். பெரும்பாலானவர்கள் செய்யும் வேலை என்பது அவர்களின் பிழைப்புக்காக, உயிர் வாழ்வதற்காக அவர் செய்வதுதான்.வெறும் உலகியல்வாதியாகவே தன்  வாழ்க்கையை மாற்றிக் கொண்ட ஒருவருக்கு அதைப் பற்றிய ஒரு கண்டனம் இருக்கும். ஆனால் அவர் எதையும் செய்யும் துணிவு கொண்டவரும் அல்ல. ஆகவே அதை மீறி அவர் செல்வதுமில்லை. ஆகவே அவர் அந்த வேலையிலேயே மேல அதிகமான தகுதி கொண்டவ, ஆனால் தகுதி மறுக்கப்பட்டமையால் சோர்வுற்ற் அதிலேயே ஒதுங்கிக் கொண்டவன் என்கிற பாவவனை உருவாக்குகிறார். அது அவருக்கு உதவியாக இருக்கிறது.

உண்மையிலேயே அவருக்கு ஏதாவது தகுதி இருந்தது என்றால் அந்த வேலையில் இருந்து மீறிச் செல்ல அவர் ஏன் முயலவில்லை? அதற்கு அப்பால் தன் ஆற்றல், கற்பனை திறன ஆகியவை வெளிப்படும் ஒரு துறையை ஏன் தேர்ந்தெடுத்துக் கொள்ளவில்லை?  முக்கியமானவர்கள் பலரும் எளிய வேலைகளில் இருந்திருக்கிறார்கள்.  அதிலிருந்து கொண்டு தொழிற்சங்க பணிகளை ஆற்றி இருக்கிறார்கள்.இலக்கிய பணிகள் செய்திருக்கிறார்கள். சமூகப் பணிகளை செய்து இருக்கிறார்கள். மேலும் படித்து பெரிய வேலைகளுக்கு வந்தவர்களும் உண்டு.

ஒருவர் ஒருவேலையில் முடங்கி விட்டார் என்றால் உண்மையில் அவருடைய தகுதி அது தான். அவர் அதைவிட அதிக தகுதி கொண்டவர் என்றும் வாய்ப்பில்லை என்பதனால் முடங்கி இருக்கிறார் என்றும் சொல்வது அவருடைய ஒரு தற்காப்புப் பாவனை மட்டுமே.

எம்.பாஸ்கர்

 

முந்தைய கட்டுரைஇஸ்லாமிய மெய்யியல், சூபி ஞானம்- வகுப்புகள்.
அடுத்த கட்டுரைThe tribute to Bharathiraja.