யோகம் இரண்டாம்நிலை, கடிதங்கள்

அன்புள்ள திரு. ஜெயமோகன் அவர்களுக்கு,

இரண்டாம் கட்ட யோகா பயிற்சி முகாமை ஒருங்கமைத்தற்கு மிகவும் நன்றி. முதல் கட்ட பயிற்சியில் அடைந்த மகிழ்வான அனுபவத்தினால் மிக ஆவலுடன் இந்த பயிற்சிக்கு விண்ணப்பித்தேன்.  இம்முறை நம் நண்பர்களின் உதவியினால் குறித்த நேரத்திற்கு வெள்ளிமலை அடைய முடிந்தது.  ஒப்பீட்டளவில், இம்முறை பயிற்சி ஆரம்பம் முதலே சிறு வீரியத்துடன் இருந்தது.

நமது உடல் மற்றும் மனதினை தயார் செய்வதற்கே முதல் கட்ட பயிற்சியின் நோக்கம், ஒரு யோகா சாதகனாக மாற விரும்புவருக்கான முறையான யோகா முறைமைகள் பற்றி அறிவதே  இரண்டாம் கட்ட பயிற்சி என குருஜி.சௌந்தர் விளக்கம் அளித்தார்.ஒவ்வொரு ஆசனத்திற்கு பிறகான எதிர் ஆசனத்தின் தேவை, ஆசன பயிற்சியினால் உள்ளுறுப்புகளில் ஏற்படும் மாற்றம், சீதோஷண நிலைக்கு ஏற்ப செய்யக்கூடிய ப்ரயணாயம் என குருஜின் விளக்கங்கள் விரிந்து கொண்டே இருந்தன.

இந்த மூன்று தினங்களும் எனது மகிழ்ச்சி கணக்கின் வரவு. பயிற்சிகள் வீரியத்துடன் இருந்தாலும் குருஜி எங்களை மிக இலகுவாகவே அணுகினர். தொடர்ந்து செய்வதின் மூலம் கைகூடும் என்ற உத்வேகத்தினை அளித்து கொண்டே இருந்தார்.  குருஜியின் மகன் மாற்று பயிற்சியில் கலந்து கொண்ட நண்பர்களின் குழந்தையின் அருகாமை, அவர்களின் நடந்த பாட்டுக்கு பாட்டு, மேலும்,திரு. அஜிதன் அவர்களுடன் நடந்த சிறு கலந்துரையாடல் என நல்லதொரு அனுபவம்.

நன்றி.

இரத்தினசபாபதி
சென்னை

*

வணக்கம் ஐயா ,

குருஜி சௌந்தர் அவர்களின் இரண்டாம் கட்ட யோகா பயிற்சி வகுப்புகள் முடிந்து திரும்பினோம்.

நானும் என் மகள் பிரேம் மாயாவும் என்பேரன் பேத்திகளுடன் கலந்துகொண்டு நிறைவடைந்தோம்.

இந்த இரண்டாம் கட்ட பயிற்சிகள் என்னை ஒரு சாதகன் ஆக்கும் என்று நம்புகிறேன்.

நன்றியுடன்,

அனுமுத்து.

முந்தைய கட்டுரைதியானப் பயிற்சி முகாம்
அடுத்த கட்டுரைபீத்தோவன் இசை அறிமுகம்