விபாசனா, பௌத்த மெய்யியல் வகுப்புகள்

 

லி கவிஞர், நாவலாசிரியர். தொழில்முறையில் அறிவியல் ஆய்வாளர். பௌத்த தியானம் மற்றும் மெய்யியலில் முறையான பயிற்சி கொண்டவர். அவர் நடத்திய பௌத்த மெய்யியல் – விபாசனா வகுப்பு பங்கேற்பாளர்களுக்கு மிகப்பெரிய தொடக்கமாக அமைந்தது என்று குறிப்பிட்டிருக்கின்றனர்.  முதல் வகுப்பு சென்ற ஜூலை முதல் வாரம் நிகழ்ந்தது, விரைவிலேயே அதன் இடங்கள் நிறைவுற்றமையால் மீண்டும் அடுத்த வகுப்புகள் அறிவிக்கப்படுகின்றன.

2005-ல் கோயங்கா தியானப் பயிற்சியோடு பௌத்த ஆய்வுப்பயணத்தை தொடங்கிய வி.அமலன் ஸ்டேன்லி போதி ஜென்டோவில் ஜென் பயிற்சி பெற்றார். 2008-ல் ஜென் துறவி திக் நாட் ஹஞ் அவர்களிடம் நேரடிப் பயிற்சியை வியட்நாமில் பெற்றுக் கொண்டார்.2010-ல் மூன்று வருடங்கள் ஆஸ்திரேலியாவிலிருந்து பாட்ரிக் கீர்னி எனும் விபசனா ஆசிரியரை கொடைக்கானலில் உள்ள போதி ஜென்டோ மையத்திற்குத்  தொடர்ந்து அழைத்து வந்து கற்றுக்கொண்டார். அவரிடம் தொடர்ந்து தவ முகாம் நடத்தவும் கற்றுக்கொண்டார். 2013-ல் சோகிஈமா ரின்போசே மூலம் திபெத்திய மகாமுத்ரா, ட்சோக்சென் பயிற்சி பெற்றார்.

இரண்டரை ஆண்டு அகவிழிப்புத் தியானப்பயிற்சி ஆசிரியராக The Awareness Training Institute and the Greater Good Science Center at the University of California மையத்தால் பயிற்சியும் சான்றும் (MMTCP) பெற்றுக் கொண்டார்

யோகமரபின் தொடக்கம் எது என நமக்குத் தெரியாது. சாங்கிய தரிசனத்தின் ஒரு கிளையாக அது பதஞ்சலியால் வரையறை செய்யப்பட்டது. பின்னர் சமண மதத்தில் வளர்ச்சி அடைந்தது. அதை முழுவிரிவை அடையச்செய்தவர்கள் பௌத்தர்கள். பௌத்த யோகாசார மரபே தியானம் என்பதற்கான இன்றைய அர்த்ததை உருவாக்கியது. அசங்கர், வசுபந்து, திக்நாகர், நாகார்ஜுனர், தர்மகீர்த்தி, தர்மசேனர், தர்மபாலர் என அதன் ஆசிரியர் மரபு மிக விரிவானது. போதிதர்மர் வழியாக சீனாவுக்குச் சென்று அங்கிருந்து ஜப்பான் சென்று ஜென் பௌத்தம் ஆகியது. பத்மசம்பவர் வழியாக திபெத் சென்று திபெத்திய பௌத்தமாக ஆகியது. திபெத்திய பௌத்தம் வஜ்ராயனம் எனப்படுகிறது.

பௌத்தம் வளர்த்தெடுத்த யோகாசார மரபு இந்தியாவில் பெரும்பாலும் மறைந்துவிட்டது, அதன் அடிப்படைகள் சில வேறுவகையில் நீடிக்கின்றன. பௌத்த தியான – மெய்யியல் மரபை அது இங்கிருந்து சென்று வளர்ந்து பேருருவம் கொண்டிருக்கும் திபெத், ஜப்பான், தாய்லாந்து பௌத்த மரபுகளிடமிருந்தே நாம் கற்கமுடிகிறது. இப்பயிற்சி அதற்கான முயற்சி.

September 6, 7 and 8 (Friday, Saturday, Sunday)

தொடர்புக்கு [email protected]

விபாசனா, கடிதம்

பௌத்தம்,விபாசனா- கடிதம்

வீடும் வகுப்பும், கடிதம்

==============================================

எங்கள் தமிழ் வலைத்தளம் unifiedwisdom.guru  

Our English Website   unifiedwisdom.today 

எங்கள் யூ டியூப் சேனல் முழுமையறிவு யூடியூப்

எங்கள் முகநூல் பக்கம் முழுமையறிவு முகநூல்

எங்கள் இன்ஸ்டா பக்கம் muzumaiaivu insta

முந்தைய வகுப்புகள், இடமிருப்பவை

மேற்கத்திய கலைமரபு (ஓவியம், புகைப்படம்) ஏ.வி.மணிகண்டன்  

கலைச்சிந்தனையாளரும், புகைப்பட நிபுணருமான ஏ.வி.மணிகண்டன் நடத்தும் மேற்கத்தியக் கலைமரபு வகுப்பு நான்காம் முறையாக நடைபெறுகிறது. நான்காவது அணி மாணவர்கள் இடம்பெறுகிறார்கள். முன்பு நடந்த வகுப்புகளில் பங்குகொண்டவர்களில் பலர் அவர்கள் வாழ்க்கையின் இன்னொரு தொடக்கம் என்றே எழுதியிருக்கிறார்கள். அந்த வகுப்புகளின் மறு தொடர்ச்சி இது.

இது ஓவியப்பயிற்சி அல்ல. ஓவியம்- காட்சிக்கலையின் அழகியல் என்ன, அதிலுள்ள வெவ்வேறு கலைமரபுகள் என்னென்ன என்பதை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி இது. ஒரு நவீன மனிதன், இன்றைய சமகால உலகில் புழங்குவதற்கேகூட இந்தப் பயிற்சி அவசியமானது. ஓர் இல்லத்தை உள்ளலங்காரம் செய்வதை முடிவெடுக்க, ஒரு கட்டிடத்தின் அமைப்பை புரிந்துகொள்ள,ஓர் ஆடையை முடிவுசெய்ய இன்று ஒருவருக்கு அடிப்படை அழகியல் பயிற்சி தேவையாகிறது. அது நம் கல்வியமைப்பினூடாக எங்குமே அளிக்கப்படுவதில்லை. இது அதற்கான ரசனைப்பயிற்சி. கலையின் தத்துவத்துடன் இணைத்து இப்பயிற்சி அளிக்கப்படுகிறது

நாள் ஆகஸ்ட் 30, 31 மற்றும் செப்டெம்பர் 1 கலந்துகொள்பவர்கள் தொடர்புகொள்ளலாம்

[email protected]

——-         ————     —————————-

ஓவியப்பயிற்சிக்குப் பின்…ஒரு கடிதம்  

ஓவியம்- கடிதம்

கண்களைக் கண்டடைதல், கடிதம்

சித்திரம் பயில்தல், கடிதம்

ஓவியத்தினூடாக அறிதல், கடிதம்

ஓவியக்கலைப் பயிற்சி, கடிதம்

ஓவியக்கல்வி, புதிய தலைமுறை- கடிதம்

ஓவியங்களை அறிதல்- கடிதம்

 

  இடங்கள் நிறைவுற்றவை 

 

தத்துவம் முதல் வகுப்புஆகஸ்ட் 2,3 மற்றும் 4 (வெள்ளி, சனி, ஞாயிறு) அன்று அறிவிக்கப்பட்டிருந்த தத்துவம் முதல் வகுப்புக்கான இடங்கள் நிறைவுற்றன.

 

அடிப்படை யோகப்பயிற்சி

நாள் ஜூலை 26 27 மற்றும் 28 (வெள்ளி சனி ஞாயிறு)

(இடங்கள் நிறைவுற்றன)

ஜெர்மானிய தத்துவ முகாம்

ஆகஸ்ட் 23,24 மற்றும் 25 (வெள்ளி சனி ஞாயிறு)

இடங்கள் நிறைவுற்றன

இந்திய தத்துவம் முதல் வகுப்பு
செப்டெம்பர் 13,14 மற்றும் 15 (வெள்ளி சனி ஞாயிறு)

ஆகஸ்டில் அறிவிக்கப்பட்டிருந்த நிகழ்வின் இடங்கள் நிறைவுற்றன. செப்டெம்பர் வகுப்பின் இடங்களும் நிறைவுற்றன.

ஆலயக்கலைப் பயிற்சி இரண்டாம் நிலை

நாள் ஆகஸ்ட் 16 17 மற்றும் 18 (வெள்ளி, சனி, ஞாயிறு)

இடங்கள் நிறைவுற்றன

========================================================

 வரவிருக்கும் நிகழ்வுகள்

இப்போதே பதிவு செய்யலாம்

தமிழ் மரபிலக்கிய வாசிப்புப் பயிற்சி

மரபின் மைந்தன் முத்தையா மரபிலக்கியத்தில் முறையான பயிற்சியும் நவீன இலக்கிய வாசிப்பும் உடையவர். அவர் நடத்தும் மரபிலக்கியப் பயிற்சி வகுப்புகள்  நிகழும். சங்க இலக்கியம் முதல் சிற்றிலக்கியங்கள் வரையிலான தமிழ் இலக்கிய மரபின் தொடர்ச்சியும் அவற்றை வாசிக்கும் முறையும் கற்பிக்கப்படும். இது  இலக்கணப்பயிற்சி அல்லது தகவல்பயிற்சி அல்ல. முழுக்க முழுக்க இலக்கிய ரசனைப் பயிற்சி மட்டுமே

செப்டெம்பர் மாதம் 20 21மற்றும் 22 (வெள்ளி சனி ஞாயிறு)

உளக்குவிப்பு -தியானம் அறிமுகப்பயிற்சி 

தில்லை செந்தில்பிரபு நடத்தும் உளக்குவிப்பு மற்றும் தியானப்பயிற்சிகள் பல முகாம்களாக நடைபெற்றுள்ளன. ஏராளமான பங்கேற்பாளர்கள் அவை அளித்த ஆழ்ந்த தன்னறிதலை எழுதியுள்ளனர்.

யோகம், தியானம் ஆகியவை சென்ற நூற்றாண்டில் அனைவருக்கும் உரியவையாக இருக்கவில்லை. இன்று நம்மில் பெரும்பாலானவர்கள் மூளையுழைப்புக்கு வந்துவிட்டோம். பழைய இறுக்கமான குடும்ப அமைப்பும் சமூக அமைப்பும் இன்றில்லை. ஆகவே அனைவரும் தனியர்கள். ஊடகப்பெருக்கம் காரணமாக நம் கவனம் சிதறடிக்கப்படுகிறது.

விளைவாக ஒவ்வொருவரும் உளச்சோர்வுக்கு ஆளாகிறோம். உளச்சோர்வுக்கு மருந்து கவனம் குவித்து பணியாற்றுவது. அதுவும் இயல்வதில்லை. இச்சூழலில் மரபார்ந்த யோக- தியான முறைமைகளின் நவீன கலவையான செயல்முறைகளும், உளப்பயிற்சிகளும் பேருதவியாக அமைபவை. சென்ற ஐம்பதாண்டுகளில் மறு அமைப்பு செய்யப்பட்ட அந்த யோக- தியான முறைகளை அத்துறையில் இருபத்தைந்தாண்டுக்கால பயிற்சியும் அனுபவமும் கொண்ட தில்லை செந்தில் பிரபு கற்பிக்கிறார்.

செப்டெம்பர் 27 28 மற்றும் 29 (வெள்ளி சனி ஞாயிறு)

முந்தைய கட்டுரைஅரசியல் கடந்த கல்வி ஏன்?
அடுத்த கட்டுரைமரபுக்கலையும் நவீனக்கலையும்