வணக்கம் ஜெ
ஆலயக் கலை இரண்டாவது நிலை முகாம் சிறப்பாக நடந்தது. சில நுணுக்கமான விஷயங்களை பகிர்ந்து கொள்ள முடிந்தது. ஆலயங்களை ஆவணப்படுத்தி எழுதும் முறை குறித்து உரையாடினேன். மிகவும் நன்றி .
ஆலயங்களை ஆவணப்படுத்தும் போது அது சார்ந்த கலை மரபுகள், வாகனங்கள், தேர்கள் குறித்தும் சிறு குறிப்புகள் எழுத சொல்லி இருக்கிறேன். கோவை தேர் சிற்பி முருகேசன் வந்திருந்தார். அவரை ஓர் 30 நிமிடம் தேர்கள் உருவாகும் விதம் குறித்து பேச சொன்னேன். அருமையாகவும் எளிமையாகவும் விளக்கினார்
ஜெயக்குமார் பரத்வாஜ்
அன்புள்ள ஜெயக்குமார்
ஒரு வகுப்பில் இரண்டு கலைப்பயிற்றுநர்கள் அமைந்தது நல்லூழ்தான். சிறப்பு
இந்த வகுப்பில் நீங்கள் பயிற்றுவித்த அமைப்பின்படி முழுமையான செய்திகளுடன் நூல்கள் சில உருவாகவேண்டும். அந்நூல்களை இந்தக் குழுவினரே சேர்ந்தமர்ந்து முழுமையாக்கிச் செப்பனிடமால். அந்நூல்களை விஷ்ணுபுரம் பதிப்பகம் சார்பில்கூட வெளியிடலாம்.
ஆலயங்கள் பற்றிய நூல்கள் உருவாவதென்பது இந்தியக் கலைமரபின் நீட்சிக்கு மிக அவசியமானது
ஜெ