மதம், மரபு – கடிதம்

 

அன்புள்ள ஜெ

மதம் மரபு அரசியல் பற்றிய தெளிவை அளிக்கும் கட்டுரை. நம்முடைய சூழலில் உள்ள மிகப்பெரிய சிக்கல் என்னவென்றால் கருத்து என்பதே இல்லை. ஆவேசக்கூச்சல்கள் மட்டும்தான் உள்ளன. எந்த தரப்பை எடுத்துக்கொண்டாலும் ஓலமிடுவதுதான் நடக்கிறது. ஒற்றைநிலைபாடு. ஒற்றைப்பார்வை. வெறுப்பும் காழ்ப்புமாக எதிர்த்தரப்பைப் பார்க்கும் வெறி.

இச்சூழலில் இருபக்கமும் பார்த்து நிலைபாடு எடுப்பதும், எல்லாவற்றையும் வரலாற்றிலும் பண்பாட்டிலும் விரிந்த பரப்பில் பொருத்தி புரிந்துகொள்வதும் மிகமிக அவசியமானவை, ஆனால் அரிதானவை. அத்தகைய ஒரு கட்டுரை அது. எனக்கிருந்த பல நிலைமாற்றங்களை தெளிவுபடுத்தியது. நன்றி

எஸ்.பி.சாரதி

மதம், மரபு, அரசியல்

முந்தைய கட்டுரைமரபும் கொண்டாட்டமும்
அடுத்த கட்டுரைஉத்திஷ்டத!