தத்துவம், நகரத்து உள்ளறை வகுப்புகள்- கடிதம்

அன்புள்ள ஜெயமோகன்,

உங்கள் கடிதம் கண்டேன். மகிழ்ச்சி. நகரங்களில் நடத்தப்படும் உள்ளறை வகுப்புகளுக்கும் சில நன்மைகள் உண்டு. கிளம்ப முடியவில்லை என்ற ஒரே காரணத்துக்காக இந்த வகுப்புகளை தவிர்ப்பவர்களுக்கு அவை உதவியானவை. அத்துடன் இந்த வகுப்புகள் நடைபெறும் நகரங்களில் இதில் பங்குகொள்பவர்கள் ஒரு சிறிய குழுவாக ஆகி தொடர்ச்சியாக தத்துவக் கல்வியை அடைய முடியும். அவர்கள் தங்களுக்குள் அடிக்கடிச் சந்தித்துக்கொள்ள முடியும் என்பது ஒரு வசதி.

1950களில் அப்படி நிறைய அமைப்புகள் நடைபெற்றுவந்தன. என் தந்தையார் திருச்சியில் திருலோகசீதாராம் நடத்திவந்த அமரர்சங்கம் என்னும் அமைப்பில் சம்பந்தப்பட்டிருந்தார். அவர்கள் பிரம்மசூத்திரம், உபநிஷத் எல்லாம் பாடம் கேட்டிருக்கிறார்கள். அதன்பிறகு அந்த வகையான சிறிய அமைப்புகள் எல்லாம் சிதறிவிட்டன. இன்றைக்கு நம் வாழ்க்கையில் ஒரு பெரிய சலிப்பு உள்ளது. அதை கடந்துசெல்ல இந்த வகையான அமைப்புகளும் வகுப்புகளும் தேவையாகின்றன

ரங்கநாதன என்

முந்தைய கட்டுரைகற்றல்- ஒரு கடிதம்
அடுத்த கட்டுரைபசிகடந்தவர்