ஆலயக்கலை :கற்றல் உணர்தல்

அன்புள்ள ஆசிரியருக்கு,

நலம். வெள்ளிமலையில் நிகழ்த்த படும் ஒவ்வொரு வகுப்பும் எங்களுக்கு கிடைக்கும் வர பிரசாதமாக இருக்கிறது.சென்ற ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஆலய கலை இரண்டாம் நிலை வகுப்பு வெகு அற்புதம்.

ஆலய கலை முதல் வகுப்பு முடிந்த பின்னர் கோவில் மற்றும் இந்திய கோவில் கட்டிட அமைப்புகள் ஆகியவற்றைக் கொண்டு, கோவிலை எப்படி புரிந்துக் கொள்ள வேண்டும் என்று தெரிந்தது. ஆசிரியர் ஜெயகுமார் கூறிய சொற்கள் ஒரு புது திறப்பை தந்தன. தரிசனம் என்பது நாம் தெய்வத்தை பார்ப்பது மட்டும் அல்ல, தெய்வம் நம்மை பார்ப்பதும் கூட என்று கூறினார். இந்திய சூழலில் பெரும்பாலனவர்கள் பக்தி என்ற சொல்லுக்கு வெகுண்டு எழுந்து பல அர்த்தங்களை கூறுகிறார்கள். ஆனால் அவர்களின் பக்தி குருவிடம் இருந்து அவர்கள் கற்றது அல்ல, தெய்வம் என்ற பூச்சு கொண்ட, சென்று வழிபாடு செய்துவிட்டு பிரசாதம் வாங்கி கொண்டு எந்த ஒரு புரிதலும் இல்லாமல் எப்படி சென்றோமோ அப்படியே திரும்பி வருதல் என்று காட்டுகிறார்கள்

கோவில் சென்ற அனுபவம் அல்லது அங்கு இருக்கும் சிற்ப வேலைப்பாடுகள், அங்கு வாசிக்கப்படும் மங்கள இசை கருவிகள் அல்லது கலைஞர்கள் பற்றி எந்த ஆர்வமும் இல்லாமல் இருக்கும் மனிதர்களை கண்டு ஒரு ஒவ்வாமை இருந்தது.ஆனால் ஆலய கலை வகுப்பிற்கு பின்னர், கோவில் என்ற பொருள் முற்றிலும் மாறுபட்டு இருக்கிறது. குறிப்பாக இரண்டாம் நிலை வகுப்பு முன்னர் கற்ற அனைத்தையும் ஒரு perspective-குள் கொண்டு வரும் படியான ஒன்றாக அமைந்தது.

முதல் நாள் வகுப்பு தொடங்கும் போது முதல் வகுப்பின் ஒரு சிறு நினைவூட்டலுடன் எங்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றார். முதல் ஆலய கலை வகுப்பில் பயின்ற ஆலய விமானங்களின் வகைகள், ஆதிஷ்டானத்தின் வகைகள், மற்றும் தெய்வங்களின் ஹஸ்தம், ஹாசனம்கோவில் ஆகமம் வகைகள் போன்றவற்றை எங்களிடம் கேட்க, வந்த நண்பர்கள் அனைவரும் பதில் அளித்தோம். நண்பர்கள் அனைவருமே ஆசிரியர் கூறிய பல நூல்களை படித்து தெரிந்து தான் வந்து வந்தோம், சில நண்பர்கள்சிற்ப செந்நூல்தங்கள் கைகளிலேயே எடுத்தும் வந்து இருந்தது அவர்களின் கற்கும் ஆர்வமும் வேகமும் தெரிந்தது.

வகுப்பு நேரம் போக, பிற நேரங்களில் நண்பர்கள் அனைவரும் அவர்கள் சென்ற கோவில்களின் புகைப்படங்களும், அதில் அவர்களால் ஹஸ்தங்களினால் தெரிந்து கொள்ள முடியாத தெய்வங்களையும், ஆதிஷ்டானங்கள் மற்றும் பல சந்தேகங்களையும் ஆசிரியரிடம் கேட்டோம், அவரும் எங்களுடைய எல்லா கேள்விகளுக்கும் எங்களையே பதில் கூற வைத்து சரியான பதிலை எங்களுக்கு தெரிய வைத்தார்.

அதை தொடர்ந்து பல தெய்வங்களின் நாடாகிய, நாட்டிய கூத்து ஆகியவற்றைப் பற்றியும், கலை மரபுகள் பற்றியும் எங்களுக்கு விரிவாக விளக்கினார். அவர் கூறும் ஒரு ஒரு வரிகளிலும் பல புதிய அறிஞர்களின் பெயரும், புத்தகத்தின் பெயரும் வந்துக் கொண்டே இருந்தது.

ஞாயிறு காலை, ‘ துலக்கம்என்ற தலைப்பில் ஆசிரியர் பேசியது ஆலய கலையின் இன்னும் ஒரு படி மேலான ஒரு விரிவை அளித்தது. சதாசிவ வடிவம்காஷ்மீர ஆகமம்நடராஜர் தத்துவம், அதன்உட்கிடைபற்றி அவர் கூறியது வானம் திறந்து மழையை நம்மிடையே அள்ளி தந்தது போல இருந்தது.

சனிக்கிழமை மாலை, நண்பரும் ஸ்தபதியுமான முருகேசன் அவர்கள் எடுத்த தேர் செய்யும் முறையும் மிக intense ஆன ஒரு session ஆக அமைந்தது.

ஆசிரியருடன் பயணித்து கோவில்களின் புகைப்படங்களும், அவற்றை ஆவணப் படுத்தும் திட்டம் ஒரு நல்ல முன் எடுப்பு. அதில் ஒரு சிறு முயற்சியும் தொடங்கி இருக்கிறோம்.

இவ்வாறு ஒரு ஆக சிறந்த அனுபவம் கிட்டியது எங்களது நல்லூழ்.

ஆசிரியருக்கும் உங்களுக்கும் எங்களது மனமார்ந்த வணக்கம் மற்றும் நன்றிகள்.

நன்றி,

ஷர்மிளா ராஜு

முந்தைய கட்டுரைநோன்புகள்
அடுத்த கட்டுரைதுளி மதுரம்