அன்புள்ள ஜெ
தத்துவம் பற்றிய உங்கள் காணொளிகளை தொடர்ச்சியாகப் பார்த்து வருகிறேன். தத்துவம் சார்ந்து எனக்கிருந்த ஏராளமான கேள்விகளுக்கான தெளிவை அடைந்தேன். இவையே ஒரு சீரான தத்துவ வகுப்பாக அமைகின்றன என்று எனக்கு தோன்றுகிறது. தொடர்ச்சியாக மேலும் எதிர்பார்க்கிறேன்.
செந்தில்ராஜ்
அன்புள்ள செந்தில்,
நான் இக்காணொளிகளில் செய்வது ஒன்றே. தமிழ்ச்சூழலில் தத்துவம் பற்றிய இரண்டு பிழையான புரிதல்கள் உள்ளன. ஒன்று, தத்துவம் தேவையற்றது, சலிப்பூட்டுவது என்னும் எண்ணம். இரண்டு, தத்துவம் மிகச்சிக்கலானது, தெளிவுக்கு எதிரானது என்னும் எண்ணம். அவ்வெண்ணங்களை நீக்குவதும், தத்துவக் கல்வி ஏன் அவசியத்தேவை என விளக்குவதுமே என் நோக்கம்.
தத்துவம் சிந்திக்கும் ஒவ்வொருவருக்கும் அவசியமான அடிப்படைப் பயிற்சி. சிந்தனைகள் வீண் எண்ண ஓட்டங்களாக அன்றி ஆக்கபூர்வமாக நிகழ அது இன்றியமையாதது. ஆன்மிக சாதகர்களுக்கு தத்துவம் மிகப்பெரிய அரண். அது ஐயங்கள், அலைக்கழிப்புகளை இல்லாமலாக்கும். தத்துவம் நுணுக்கமானதே ஒழிய சிக்கலானது அல்ல. அதை முறையாகக் கற்றுக்கொண்டால் மிகுந்த உளக்கிளர்ச்சியூட்டும் கற்றலனுபவமாக அமையும். இவற்றை சொல்லி நிறுவ முயல்கிறேன்.
இக்காணொளிகளை நண்பர்கள் தங்கள் நண்பர்களுக்குப் பகிரவேண்டும் என்று விரும்புகிறேன். தமிழில் அதிகம் வாசிக்காதவர்கள்கூட இவற்றை கேட்டுப் புரிந்துகொள்ளமுடியும்.
ஜெ
தத்துவம்- காணொளிகள்
- இந்து மதத்தை கற்று அறிய வேண்டுமா?
- இந்துமதம் தத்துவமும் வளர்ச்சியும்
- இந்து தத்துவத்தை எப்படிக் கற்கிறேன்?
- இந்து மதத்தை கற்று அறியவேண்டுமா?
- இந்திய தத்துவ மரபை ஏன் கற்கவேண்டும்
- மெய்ஞானத்தைக் கற்பிக்கும் தகுதி என்ன?
- யாருக்கு தத்துவம் தேவை?
- வேதாந்தக் கல்வி எதற்காக?
- மதத்தில் இருந்து தத்துவத்தை பிரிக்கமுடியுமா?
- நீங்கள் ரஜினியா கமலா?
- தத்துவம் செயலின்மைக்கு இட்டுச்செல்லுமா?
- மதங்களில் உறையும் படிமங்கள்
- வேதங்களை எல்லோரும் கற்கமுடியுமா?
- ஆசாரங்கள் எதுவரை தேவை?
- ஆன்மிகத்திற்கு அறிவியல் விளக்கம் தேவையா?
- சம்ஸ்கிருதத்தின் இடம் என்ன?
- சேர்ந்தா தனித்தா உங்கள் பயணம்?
- மதங்களில் உறையும் படிமங்கள்