அன்புள்ள ஜெ அண்ணாவுக்கு வணக்கம். ஈரோட்டிலிருந்து வீரா எழுதுகிறேன்.
முழுமையறிவு காணோளியில் வரலாற்றை நேர்மையாக கற்பது என்னும் தலைப்பில் நீங்கள் ஆற்றிய உரையை கேட்டேன். எனக்கு மிகவும் பயனுள்ள உரை. அதில் தாங்கள் அறிமுகப்படுத்திய வரலாற்று நூலான மனிதகுல வரலாறு மலையாள மொழிபெயர்ப்பு வந்துள்ளதைக் குறிப்பிட்டீர்கள். அது தமிழ் மொழிபெயர்ப்பில் வந்துள்ளதா என்பதைத் தெரிவிக்கவும். உண்டெனில் அது பற்றிய விபரத்தைக் கோருகிறேன்.
இந்தப் புத்தகத்தின் ஆசிரியர்கள் Leonard Woolley மற்றும் Jaquetta Hawkes பற்றிய தகவல்களை இணையத்தில் வாசித்தேன். அவர்களைப் பற்றிய அறிமுகத்துக்கு நன்றிகள் பல.
மற்றொன்று நான் இதுவரை archive.org பற்றி அறிந்திருக்கவில்லை. உங்கள் இந்தக் காணொளி வாயிலாகத்தான் அறிந்து கொண்டேன். அந்த இணைய நூலகத்தின் உள்ளே நுழைந்து பார்த்தேன். வியந்து விட்டேன். இவ்வளவு பெரிய வாசிப்பு வாய்ப்புகளை இத்தனை நாள் தவறவிட்டுவிட்டேன். இதை அறிமுகப்படுத்தியதற்கு என் மகிழ்ச்சியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
மேற்குறிப்பிட்ட மனிதகுல வரலாறு நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு பற்றிய தகவலுக்காக உங்கள் பதிலை எதிர்பார்க்கிறேன்.
நன்றி.
ப்ரியமுடன்
–வீரா