அன்புள்ள ஜெ
தங்கம் தென்னரசு அமைச்சர் சட்டச்சபையிலேயே பேசிய உரை மீதான விவாதங்களுக்குப் பின் இந்த உரையை கண்டடைந்தேன். இன்றைய சூழலுக்கு மிகப்பொருத்தமான உரை இது. நாம் ஏன் பொய்களை நம்பி, பரப்பி நம்மை தூக்கிக்காட்டிக்கொள்ள முயல்கிறோம்? நமக்கு என்னதான் பிரச்சினை? நாம் சொல்லும் வரலாறு என்பது நமது தாழ்வுணர்ச்சியால் நாம் நம்புகிற ஒன்று. உலகிலேயே நாம்தான் தொன்மையானவர்கள் என்கிறோம். உலகமெங்கும் நம்மைவிட இருமடங்கு மும்மடங்கு தொன்மையான நாகரீங்கள் உள்ளன என்பதை கவனிப்பதே இல்லை. நம்மை எவருமே வெல்லவில்லை என்கிறோம். ஆனால் நம் வரலாற்றில் களப்பிரர், ஹொய்ச்சாளர், சாளுக்கியர், சுல்தானியர், நாயக்கர், மராட்டியர் ஆகிய ஏராளமானவர்களால் நாம் வெல்லப்பட்டுள்ளோம். நம் வரலாற்றிலேயே ஒரு ஐநூறாண்டுகூட சுதந்திரமாக இருந்தது இல்லை. களப்பிரர் 300 ஆண்டுகள் நம்மை ஆண்டனர். இஸ்லாமிய சுல்தான்களின் ஆட்சி 75 ஆண்டுக்காலம் நடைபெற்றது. ஹொய்ச்சாளர்கள் வட தமிழகத்தைல் 50 ஆண்டுகள் ஆட்சி செய்தார்கள். நாயக்கர்கள் 200 ஆண்டுகள் ஆட்சி செய்தார்கள். மராட்டியர் தஞ்சையை 100 ஆண்டுகள் ஆண்டனர். அதன்பின் வெள்ளையர் ஆட்சி நடைபெற்றது. இது வரலாறு. ஆனால் இந்த அப்பட்டமனா, முழு வரலாற்றை அப்படியே மறைத்துப்பேச அமைச்சராலேயே முடிகிறது. நம் பிரச்சினை என்ன என்பதை சொல்லும் காணொளி இது. நன்றி
சிதம்பரம் எம்.ஆர்