வளரும் நாடுகள் அழியத்தொடங்குவது எப்போது?

அன்புள்ள ஜெ

நீங்கள் எகிப்துப் பயணத்தை ஒட்டி பதிவிட்ட காணொளியில் நான் கவனித்த கருத்து இது. ஒரு நாடு வளரத் தொடங்கும்போது திடீரென்று அங்கே இனவாதமும், மொழிவாதமும், மதவாதமும் மற்ற பிரிவினைவாதங்களும் தலைதூக்குகின்றன. கலவரம் உண்டாகிறது. சிலசமயம் ஆட்சிமாற்றமும் நிகழ்கிறது. விளைவாக அந்த நாடு பொருளியலில் பெரும் வீழ்ச்சியைச் சந்திக்கிறது. இது அந்நாடுகள் வளர்வதை விரும்பாதவர்களின் செயல் என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. எகிப்தில் நடந்ததுதான் பங்களாதேஷில் நடைபெற்றது. அப்படி எவ்வளவோ நாடுகளை உதாரணமாகச் சொல்லமுடியும்.

அர்விந்த்

அன்புள்ள அர்விந்த்,

ஒரு நாடு அமைதியாக இருக்கையில், தொழிலில் வளர்ந்துகொண்டிருக்கையில், அங்கே பிரிவினை எண்ணங்கள் உருவாக்கப்படுகின்றன. அவற்றை நிதி பெற்றுக்கொண்டு அறிவுஜீவிகள் செய்வார்கள். பிரிவினை உணர்ச்சிக்கான வரலாற்றுப்பின்புலம், அடையாளங்கள் எல்லாவற்றையும் அவர்களே உண்டுபண்ணுவார்கள்.  அது வெடிகுண்டை புதைத்து வைப்பதுதான். தேவையானபோது நிதியை அளித்தவர்கள் ஒரு பொத்தானை அமுக்கினால்போதும், வெடிக்க ஆரம்பித்துவிடும். இன்று உள்நாட்டுப்போரில் அழிந்து பஞ்சமும் பிணியுமாக அழியும் நாடுகள் ஐம்பதாண்டுகளுக்கு முன்புவரைக்கும்கூட செழிப்பாக வாழ்ந்தவை என்பதே வரலாறு. சிரியா, லெபனான் வரலாறுகளை பாருங்கள், தெரியும்.

ஜெ

 

முந்தைய கட்டுரைவிலக்குதலின் விதிகள்