அன்புள்ள ஜெ,
புத்தருக்கான நிலம் ஓர் அழகான சிறிய உரை. புத்தர் இமைய மலைகளில் இருந்து இறங்கி மலைகளுக்கே திரும்பிய ஓர் அலை என்னும் வரி என்னை திகைக்கச் செய்தது. நூற்றுக்கணக்கான உரைகளை கேட்கிறோம், இருந்தும் உங்களிடம் சொல்ல முற்றிலும் புதிதாக ஏதோ இருந்துகொண்டேதான் உள்ளது. புத்தர் ஒரு நேபாளி, உண்மையில் அவர் முகம் ஒரு மலைமுகமாகவே இருந்திருக்கவேண்டும் என்ற கோணத்தில் நான் சிந்தனை செய்ததே இல்லை. லடாக்கில் புத்தரைப் பார்க்கையில் எல்லாம் அவர்களின் முகத்தின் வடிவை அளித்திருக்கிறார்கள் என்ற எண்ணம்தான் வந்துள்ளது. அந்த இடமும் அழகானது
சந்திரசேகர்