இணையமும் இயற்கையும்

 

அன்புள்ள ஜெ

குழந்தைகளுக்கு இயற்கையை அறிமுகம் செய்வது பற்றிய உரையை கேட்டேன். முக்கியமான உரை. நம் பெற்றோர் இதை இன்றைக்கு கவனத்தில் கொள்வதில்லை. குழந்தைகளை படிப்பில்முக்கி எடுப்பதிலேயேகுறியாக இருக்கிறார்கள். அக்குழந்தையும் படிப்பிலேயே மூழ்கியிருந்தால் பிரச்சினை இல்லை. எங்கோ ஓர் இடத்தில் படிப்பின் அழுத்தம் தாளாமல் அது இணையத்திற்குள் சென்றுவிட்டால் அப்படியே மூழ்கிப்போய்விடும். படிப்பு தொடரமுடியாது. அது மனசோர்வுக்கு உள்ளாக்கும். இன்றைக்கு நாம் பார்க்கும் கல்லூரி மாணவர்களில் கணிசமானவர்கள் உளச்சோர்வு கொண்டவர்கள். அதற்காக மருந்து சாப்பிடுபவர்கள். அந்த மருந்துக்கும் அடிமையானவர்கள். காரணம் படிப்பு ஓடவில்லை, ஆகவே எதிர்காலம் இருண்டுவிட்டது என்பதுதான். ஏன் படிப்பு ஓடவில்லை என்றால் இண்டர்நெட் அடிக்‌ஷன். ஏன் அந்த அடிமைத்தனம் என்றால் மனம் ஒன்றிச்செய்யும் எந்த வேலையுமே அறிமுகமில்லை என்பதுதான். இயற்கையை அனுபவத்தில் ஒரு நல்ல மனப்பயிற்சி. அல்லது ஏதாவது கைத்தொழிலாவது செய்தாகவேண்டும். வெள்ளையர்கள் அப்படிப்பல பயிற்சிகளைச் செய்கிறார்கள். நான் அமெரிக்காவில் இருந்தபோது முக்கால்வாசிப்பேர் தச்சுவேலையோ அல்லது மெக்கானிக் வேலையோ செய்வதைப் பார்த்திருக்கிறேன்.

என்.ராஜ் பாண்டியன்

முந்தைய கட்டுரைதரிசனம், கடிதம்