காணொளிகள் பற்றி…

அனைத்துக் காணொளிகளும்

அன்புள்ள ஜெயமோகன்

உங்களுடைய காணொளிகள் வழியாக உங்களை அறிந்து கொள்ளநேர்ந்த ஒருவன் நான். உங்களுடைய இணையதளத்தை இப்போதுதான் தொடர்ந்து படித்து வருகிறேன். உண்மையில் இந்த காணொளிகள் வழியாக உங்களை வருவது அடைவது என்பது மிகச் சிறந்த வழி என்று நினைக்கிறேன் .உங்களுடைய எழுத்து மொழியில் இருக்கும் ஒரு செறிவு இல்லாமல் உரையாடல் தன்மையுடன் இருக்கின்றன .ஆனால் ஒவ்வொரு காணொளியிலும் சிந்தனையை தூண்டும் ஒரு அம்சம் இருப்பதினால் இந்த காணொளிகள் எவையும் வீணானவையும் அல்ல .

இவை உடனடியாக உங்களுடைய கட்டுரைகள் ஏதோ ஒன்றுக்கு தொடுப்பை அளிகின்றன. இந்த காணொளிகளை பார்த்து இவை எழுப்பும் ஏதேனும் கேள்விக்கு பதில் தேட வேண்டும் என்றாலும் தளத்திற்கு வந்து அந்த வார்த்தைகளை போட்டு தேடினால் ஒரு தீவிரமான கட்டுரையை கண்டறிந்து விட முடிகிறது .படிப்பதற்கு பிரச்சினை இருப்பவர்கள் கூட இந்த காணொளிகள் வழியாக உங்களை மீண்டும் நெருக்கமாக புரிந்து கொள்ள முடியும் என்று நினைக்கிறேன் .உங்களுடைய தீவிரம் அதேசமயம் நெகிழ்வு இரண்டுமே இந்த காணொளிகள் வழியாக வெளியே வருகிறது .உங்களை ஒவ்வொரு நாளும் நேரில் சந்தித்து பேசிக்கொண்டே இருக்கும் உணர்வை நான் அடைகிறேன்.

உங்களுடைய நூல்களை நான் முன்பு வாசித்ததில்லை ஆனால் இப்போது இந்த நூல்களை நான் படிக்கிறேன். இந்த காணொளிகள் அனைத்தும் என்னுடைய குடும்பத்தில் உள்ள அனைவரும் பார்க்கக் கூடியதாக இருக்கின்றது. ஏனெனில் நூல்களை அவர்கள் படிக்க முடியாது. அவர்க்ளுக்கு படிப்பு பழக்கம் இல்லை. ஆனால் அத்தனை பேருமே இந்த காணொளிகளை பார்க்கிறார்கல்.என் வயதான தாய் தந்தை இருவருக்குமே இந்த காணொளியில் சிலவற்றை நான் அனுப்பினேன். அவற்றில் பார்க்க ஆரம்பித்து அவர்களை இப்போது தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் .இவற்றுக்காக முக்கியமாக உங்களுக்கு நான் நன்றி சொல்ல வேண்டி இருக்கிறது.

தமிழ்ஞானசம்பந்தன்

முந்தைய கட்டுரைமெய்யான அரசியல், கடிதம்
அடுத்த கட்டுரைதர்க்கபூர்வ சிந்தனை, சட்டம் செயல்படும் முறை- ஒரு வகுப்பு