ஓர் உரையாடல்

மனம் கவர்ந்த திரு ஜெயமோகன்,

 தனது ஆறாம் வகுப்பு சமூக அறிவியல் ஆசிரியர் நடத்தும் வகுப்புகளினால் வரலாறு மற்றும் புவியியல் மீது மிகுந்த ஆர்வம் கொண்டு வாசித்தல் பழக்கத்தில் உள்ளாகி அதன் மூலம் அறிந்த பலவற்றை, (புவியியல், வரலாறு, தத்துவம், அறிவியல், ..) நாள்தோறும் செய்யும் வேலை பொழுதின் நடுவே மேற்கொள்ளும் மனதை ஈர்க்கும் உரையாடல்கள் வாயிலாக  தேனியை சேர்ந்த, அலுவலகத்தில் அருகில் அமர்ந்து பணிபுரிகிற அருண் வெங்கடேஷ்நாகர்கோவிலில் வளர்ந்த அருண் குமார் ஆன எனக்கு தங்களை அறிமுகம் செய்தார், அவருக்கு நன்றி.

இதுவரை இல்லாத அளவு என்ற வகையில், என் அண்ணன் பயின்ற தமிழ்நாடு அரசின் மிக பழைமையான பல மாணவர் சங்கங்கள் நிறைந்த  கல்லூரியை போல் அல்லாமல் எடுத்த மதிப்பெண்ணுக்கு கிடைத்த, துவங்கி 10 வருடம் அடையும் அரசு பொறியியல் கல்லூரியில் ஆர்வம் குறைந்த துறையில் சேர்ந்துபயின்று முடிக்கும் சில ஆண்டுகளுக்குள் ஒரு மாணவர் அமைப்பையாவது உருவாக்கிட எண்ணி கொரோனா பெருந்தொற்றின் ஊரடங்கின் மத்தியில் ஆர்வமிகுதியில் செய்த காரியங்களில் ஒன்றான சக மாணவர்களுக்கு கற்றுத்தர வேண்டி பயின்ற எனது துறையின் அடிப்படை பாடத்தின் மீது நேரடி நேர்காணலில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு நன்கு பதிலளித்து, என் கல்லூரியிலிருந்து பன்னாட்டு முதல் அடுக்கு வாகனப்பாகம் உற்பத்தி செய்யும் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் இயந்திரவியல் பொறியாளர் ஆவேன்.

கிடைத்தது நல்ல ஊதியத்துடன் கூடிய நல்ல ஒரு வேலை வார இறுதிகளில் பிடித்ததை செய்து வாழ்க்கையை மகிழ்வாக நகர்த்தி விடலாம் என்ற எண்ணம் நகர பெருங்காலம் எடுத்துக்கொள்ளவில்லை. பள்ளியில் தொடங்க முடியாத ஒருதலைக் காதலை மகிழ்வுடன் இருவரும் முயல, பொருந்தாத வண்ணம் என உணர்ந்து நான் கூற, பின் சிறிது காலம் எடுத்து குற்ற உணர்ச்சியில் விருப்பத்தை பகிர, நினைத்து கூட பார்க்கவில்லை மறுமுனை மறுப்பு மனதை இவ்வாறு கிழிக்கும் என்று. அடுத்த சிறு காலம் சலிப்பூட்டும் வேலை நாட்களில் சராசரி பன்னிரண்டு மணிநேரம் அலுவலகத்திலும் பின் மீதமிருக்கும் மிகுதி நேரத்தை விருப்பமின்றி அன்பான சுற்றங்களின் ( பள்ளி கல்லூரி அலுவலக வட்டம்) மத்தியில் செலவிட்ட பின்  எஞ்சிய நேரத்தில் மனதில் எழும் பலவற்றுள் சிறு செயல்களை கூட தட்டு தடுமாறி செய்து வரும் வாழ்க்கையை வாழ்ந்து வருகிறேன்.

இவ்வாறு நான் வெறுமையான வாழ்க்கையை வாழ்கிறேன் என மனதளவில் அறிந்திருந்தாலும், தங்களின் காணோளி வாயிலான கண்ணோட்ட பகிர்வுகள் இடித்து உரைப்பனவாக இருக்கின்றன

அடுத்து வரும் ஆண்டுகளில் எனக்கான எப்பொழுதும் அருளும் தெய்வத்தை தேடும் பயணத்தை மேற்கொள்ளத் தோன்றுகிறது.

தேடி பல பெருஞ் செயல்களை புரிய மனம் துடிக்கிறது.

ஆனால் ஆர்வம் பலவற்றின் மேல் எழுகின்றனஅனைத்தையும் முயன்று பார்க்க பல வருடம் கூட எடுக்கும் என மனதில் கேள்வி எழுகிறது. இவற்றை சொல்லி புரிய வைக்கும் பக்குவத்தில் இல்லாத என் மற்றும் என் அண்ணன் இருவரையும் எப்படியோ பல பெரும் சோதனைகளை தாண்டி படிக்க வைத்து விட்டு இப்போது போதிய வருமானம் இல்லாது பிள்ளைகளை சார்ந்த வாழும் சராசரி நடுத்தர பெற்றோர்களிடம்மேற்படிப்பு படிக்க விழைவதாக கலந்துரையாடி 2 ஆண்டுகள் நேரம் கேட்டிருக்கிறேன்.

அவர்களோ தொழிலை ஓரளவு செய்து விட்டு, மாதம் குறைந்தது ஒருமுறையாவது தவறாமல் வரும் சொந்தங்களின் ஏதோ ஒரு விழாவில் மொய் எழுதி கலந்து கொண்டும், அங்கே நால்வர் கேட்கிறார்கள் என தன் மூத்த, தற்பொழுது திருமணம் மீது நாட்டம் இல்லாத மகனிடம் வரன் பார்க்கவா எனக்கேட்டு கொண்டும் எஞ்சிய நேரங்களில் தொலைக்காட்சியில் நாடகங்களை பார்த்துக் கொண்டும், இதுவே வாழ்க்கையை இதிலே சந்தோஷம் என வாழ்ந்து வருகின்றனர். அவர்களுடன் தங்களின் வாழ்க்கையின் மீதான கண்ணோட்டங்களை பகிர விரும்புகிறேன்.

இதுவே நான் செய்து வரும் ஒரு வழி கற்பனை உரையாடல்கள்.

மன்னிக்கவும், எழுத்துப் பிழைகளை கண்டறிந்து வரும் காலங்களில் திருத்தம் செய்கிறேன். தங்களின் பெருஞ் செயல்கள் தொடரட்டும்.

உண்மையான பூரிப்பூடன் நான் எழுதிய ஒரு பக்கத்தை (இதனை சிறுகதை எனக் கூறலாமா எனத் தெரியவில்லை) உங்களுடன் பகிர விரும்புகிறேன்.

 https://arun-idhunaal.blogspot.com/2024/04/blog-post.html

முந்தைய கட்டுரைகாணொளிகளும் உரையாடலும்