இண்ட்ரோவெர்ட்- கடிதம்

எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு.

மீண்டும் ஒரு உளவியல் கருத்தை தெளிவாக எடுத்து கையாண்டு இருக்கிறீர்கள். Skeptical மற்றும் Nihilist ஆகிய வார்த்தைகளின் வித்தியாசத்தை தெளிவாக விளக்குகிறது தன்னை தானே மனிதன் குறுக்கி கொள்கிறான் என்பது உண்மை.இன்றைய இளைஞர்களிடம் இது பரவலாக காணப்படுகிறது. பள்ளிகளில் Communication skills என்பது எழுதி கொடுத்ததை ஒப்புவிப்பதாகவே உள்ளது என்பது உண்மை.இயல்பாக ஒரு கருத்தை பேச எழுத நம் பள்ளிகளில் பயிற்சிகள் குறைவு. நேர்முகத்தேர்வுகளில் வெற்றி காண்பதற்கு இயல்பான மொழிப்பயிற்சி முக்கியம்.செயல் வழியே நாம் நம்முடைய இளைய தலைமுறைக்கு மொழியை கற்பிக்கும்  போது அவர்கள் பேச்சுமொழி வளம் பெறும். Interaction என்பது Introvert என்ற தன்மையை மாற்றும் என்பதில் ஐயமில்லை.செந்தமிழும் நாப்பழக்கம் பேச பேச மொழி வளரும். படிக்க படிக்க கருத்துக்களை கையாளும் திறமை வளரும்.திறன் மேம்பாட்டு பயிற்சி கூடங்கள் நிறைய பெருக வேண்டும். தன்னைத்தானே கூண்டுக்குள் அடைக்கும் தயக்கத்தை தகிர்த்து எறிவோம்.மொழி ஆளுமை எல்லா துறைகளுக்கும் அவசியம்.
தா.சிதம்பரம் .
தோவாளை.
முந்தைய கட்டுரைதத்துவ அறிமுகம் முதல்நிலை நிகழுமா?
அடுத்த கட்டுரைIntroduction of Indian Philosophy Classes in English