ஜெயமோகன் அவர்களுக்கு.
அத்வைதம் ஏன்? என்ற கேள்விக்கு இடமேயில்லை.காரணம் இருப்பதுவும் இல்லாதிருப்பதுவும் அதுதானே.எனினும் சங்கரர் முதல் இன்றைய ஜெயமோகன் வரை அத்வைதத்தை விளக்கி கொண்டு இருப்பார்கள் இனிமேலும் விளக்கி கொண்டிருப்பார்கள். உலகம் உள்ள வரை.உள்ளம் உள்ள வரை இது தொடரும்.இது ஒரு குரு சீடர் பரம்பரை. எத்தனை மேலைத்தத்துவம் வந்தாலும் அடிப்படை அத்வைத்திலேயே முடியும்.காரணம் அத்வைதம் உண்மை.அதை நிரூபிக்க மாயை தேவைப்படுகிறது.ஒரு அத்வைதவாதி என்றும் சோர்ந்து போவதில்லை காரணம் அவனுக்கு தெரியும் அது காலம் கடந்த உண்மை என்று.இன்று நான் நாளை வேறு ஒரு அத்வைதி அதை யாரும் கூறாமல் விளக்கு போன்று எடுத்துச்செல்வார்.விளக்கு ஒளிவிட்டு கொண்டே இருக்கும்.எடுத்து செல்வது யார்? என்ற கேள்விக்கு இடமில்லை.இன்னும் சொல்லப்போனால் மாயை அதிகரிக்க அதிகரிக்க அத்வைத சிந்தனை அதிகரிக்கும். சங்கரர் மேலும் மேலும் ஒளிர்வார்.
அசதோமா சத்கமய.இருட்டிலிருந்துதான் வெளிச்சம் அறியாமையிலிருந்துதான் அறிவு. அத்வைதம் ஒரு தொடர். தொடரட்டும் .
தா.சிதம்பரம்











