

அன்புள்ள ஜெயமோகன்,
நீங்கள் முகநூலில் வெளியிட்ட காணொளியில் இங்கு வந்து கொண்டிருக்கும் எதிர்மறைச்சிந்தனைகள் உங்களை பாதிக்கவில்லை என்று சொல்லி இருந்தீர்கள். ஆனால் உண்மையில் அப்படி இருக்க முடியுமா? இப்போது மிகப்பெரிய ஒரு தீவிரத்துடன் தமிழின் நவீன இலக்கியத்தை உலக அளவுக்கு கொண்டு செல்லும் நோக்கத்துடன் ஒரு முயற்சியை ஈடுபட்டு இருக்கிறீர்கள். ந்த முயற்சி எந்த அளவுக்கு பயனளிக்கும் என்பதும் அதன் பயனாளிகள் எவர் என்பதும் எல்லாம் ஒரு பக்கம் விவாதிக்கப்படலாம். ஆனால் எந்த வகையிலும் பார்த்தாலும் அது ஒரு பெரிய நேர்மையான முயற்சி. அதற்கு ஒரு எளிய வாழ்த்துக்களைக் கூட சொல்ல முடியாத அளவிற்கு நம் சூழலில் இலக்கியச் செயல்பாட்டாளர்களின் உள்ளம் கூட சுருங்கி இருப்பதை பார்க்கையில் உங்களுக்கு உண்மையிலேயே மனம் வருந்தவில்லையா?
ரா.கிருஷ்ணன்
அன்புள்ள கிருஷ்ணன்,
உண்மையிலே வருந்தவில்லை என்றுதான் திரும்ப சொல்ல விரும்புகிறேன். உண்மையில் இங்கே எதிர்மறையாகச் செயல்படுபவர்கள் சில நூறுபேர்தான். சாதகமக, நம்பிக்கையுடன் உடனிருப்போர் பல ஆயிர. இந்த ஒளியை பார்ப்பதா ந்த துளி இருளை பார்ப்பதா என்பது அவரவர் தெரிவு.
ஜெ











