அன்புள்ள ஜெயமோகன்,
பக்தி இயக்கம் பற்றிய உங்களுடைய காணொளியை பார்த்தேன். நான் சில காலம் பைத்தானில் பொறியாளனாகப் ணியாற்றி இருக்கிறேன். துகாராம்ஜியின் அந்த சமாதி இடத்திற்கு நிறைய தடவை சென்றிருக்கிறேன் .ஒரு காலத்தில் அந்த இடம் ஆண்டுக்குச் சிலநாட்கள் மட்டுமே மக்கள் வருவதாக இருந்தது. நான் செல்லும்போது கோதாவரி எல்லா காலகட்டத்திலும் நிரம்பி வழிந்து கொண்டிருக்கும். அணை அப்போது இல்லை. அந்த சமாதி ஒரு சிறிய கோயிலாக அங்கு இருந்தது. மிக ஏகாந்தமான இடம். அங்கே எனக்கு நிறைய நல்ல நினைவுகள். நிறைய கெட்ட நினைவுகள். நான் துகாராமிடம் கண்ணீர் மல்க வேண்டிகக்கொண்டதுண்டு. அங்கே தன்னைமறந்து இசையில் ஆடியதுமுண்டு.
அருணாசலம் ராமசாமி










