
அன்புள்ள இலக்கியவாதிக்கு,
நலம் விழைகிறேன். வாழும் தமிழ் இலக்கிய விழா பற்றி ஒரு பெருமிதம் மனம் முழுதும் நிறைந்து நிற்கிறது. இதற்கடியில் உள்ள முயற்சி சிலிர்க்க வைக்கிறது. இவ்விழா நிகழும் இத்தருணத்தில் தமிழுக்கென எந்த ஒரு அன்பையும் வெளிப்படுத்த முடியாத நிலையில் இருப்பதை எண்ணி மிகுந்த ஆதங்கத்தையே அடைகிறேன். இந்த ஆதங்கம் தொடராமல் இருப்பதற்கு தேவையான முயற்சிகளை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறேன். தமிழ் மீதான தங்களின்(விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்) மாறா அன்பு சில நேரங்களில் பொறாமை பட வைக்கிறது. இந்த அமைப்பை நோக்கி வர வைக்கிறது. நிகழ்ச்சி சிறப்புற்று மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்.
(இச்சூழலில் என்னுடைய இந்த கடிதம் நேர விரயமாக கூட இருக்கலாம். இருந்தும் இது என் கடமை என நினைக்கிறேன். )
இப்படிக்கு
கவிதா சண்முகம்.
அன்புள்ள கவிதா அவர்களுக்கு
இந்த அமைப்பு நிறுவனம் அல்ல. இதன் கனவுகளுடன் இணைந்து ஏதேனும் செய்பவர் எவரும் இதன் பகுதியாக ஆகிவிட முடியும். ஆகவே எவரும் இதில் உறுப்பினராக வேண்டாம். எவரும் இதில் இணையவும் முடியும்.
ஜெ









