ஆசிரியரின் சொல், கடிதம்

அன்புள்ள ஜெ

உங்கள் வாழ்க்கையை மாற்றி ஆசிரியரின் சொல் பற்றிய அந்த காணொளியை பார்த்தேன். ஆசிரியர்கள் நம்மை ஏதோ வகையில் முன்னுணர்கிறார்கள். ஆசிரியர்களுக்கு நம்மில் இருக்கும் கவனம் நமக்கு இருப்பல்லை. ஆசிரியர் நம்மை கவனிக்கும் காலகட்டத்தில் நாம் நம்மைப் பற்றி மிகையான கற்பனைகள் இருப்பதுண்டு. அல்லது நம்மைப் பற்றி மிகத் தாழ்வாகவும் சாதாரணமாக எண்ணிக் கொண்டிருப்பதும் உண்டு. நம்மை நாம் உலகம் சார்ந்த பல்வேறு ஆசைகளுக்கு அளித்துவிட்டு இருக்கு காலத்தில் நமது லட்சியத்தை நினைவுறுத்தி நாம் செலவழித்து செய்யக்கூடியவர்களாக ஆசிரியர்கள் இருக்கிறார்கள்.

எனது வாழ்க்கையில் அவ்வாறு ஆசிரியர்கள் சொன்ன சில வார்த்தைகளால் தான் நான் என்  இலக்கு என்ன என்  திசை என்ன என்று கண்டு கொண்டேன். ஒவ்வொருவருக்கும் அவருடைய ஆசிரியர் என்று ஒருவர் இருப்பார். அவரிடம் இருந்துதான் அவர் அந்த அனலை அவர் கொடுத்துக் கொண்டிருப்பார்.

உங்கள் சிறந்த ஆசிரியர்களுக்கு என்னுடைய வணக்கம்.

ரவீந்திரன் மாணிக்கம்

முந்தைய கட்டுரைவாழும் தமிழ் விழா, வாழ்த்து