ஆனந்த விகடனில் நான் எழுதும் தொடர் மேகங்களின் குரல் என்னும் தொடரை எழுதவிருக்கிறேன். இது சங்க சித்திரங்களைப் போலவே எழுதியிருக்கிறேன். மெய்யியல் சார்ந்த தொடர். ஆனால் பொதுவாக அனைவரும் வாசிப்பதற்குரியது.
இந்த கட்டுரைத்தொடரை நம் வட்டத்திற்கு வெளியே உள்ள ஆனந்த விகடன் வாசகர்கள் வாசிக்கவேண்டும், அவர்களில் ஆர்வம் கொண்ட சிலரைக் கண்டடையக்கூடும் என்னும் எண்ணத்தில் எழுதுகிறேன். ஆனால் தத்துவ வகுப்புகளுக்கு வந்த வாசகர்களுக்குக் கூடுதல் பொருள் அளிப்பதாக இது அமையும்.










