பணம் – கடிதம்

ஜெ,

உங்கள் காணொளியிலே பணம் பற்றிய அந்த காணொளி என்னை மிகவும் பாதிப்படையச் செய்தது. பணம் பற்றி எனக்கு எப்போதுமே குழப்பமான ஒரு சிந்தனைதான் இருந்தது. பணத்திற்காக ஓடுவோம் என்றால் வாழ்க்கை இழந்து விடுவோம். ஆனால் பணம் இல்லாமல் இருந்தால் அவமானமும் சோர்வும் தனிமையும் தான் மிஞ்சுகிறது .இது ஒரு இரட்டைக் கொள்ளி நிலைமை.

பணம் வேண்டுமா வேண்டாமா என்பதற்கு பணத்தை நாம் எப்படி வரையறுத்துக் கொள்ள வேண்டும் என்பது முக்கியமானது. உங்களுக்கு பணம் என்பது நேரம் என்று சொன்னீர்கள். இன்னொருவருக்கு பணம் என்பது சமூக அதிகாரமாக இருக்கலாம். எதுவாக இருந்தாலும் பணம் எதற்காக என்று வரையறுத்துக் கொண்டால் அதற்கான பணத்திற்கு அப்பால் செல்லாமல் இருக்கலாம் .அதாவது நீங்கள் நேரத்தை வீணடித்து ஒருபோதும் பணம் சம்பாதிக்க மாட்டீர்கள். ஏனென்றால் நேரத்திற்காக தான் நீங்கள் பணத்தை சேகரிக்கிறீர்கள். அதேபோன்று ஒவ்வொருவரும் பணத்தைப் பற்றிய ஒரு புரிதலை உருவாக்கிக் கொண்டார் என்றால் அந்த இருதலை கொள்ளியின் நடுவே எந்த இடத்தில் நாம் நின்று கொண்டிருப்பது என்பதை தெளிவுபடுத்த முடியும் என்று தோன்றுகிறது.

முக்கியமான ஒரு காணொளி நன்றி .

கிருஷ்ணராஜ்

முந்தைய கட்டுரைகுருபூர்ணிமா உரை