தத்துவ வகுப்பும் விஷ்ணுபுரமும்.

அன்புள்ள ஜெயமோகன்,

உங்கள் தத்துவ வகுப்புகள் பற்றிய அறிமுகத்தை தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன். நான் பலமுறை விஷ்ணுபுரம் நாவலை படிக்க முயன்று பல்வேறு பகுதிகளில் கைவிட்டு இருக்கிறேன். தொடர்ந்து வாசிக்க முயன்று கொண்டிருப்பவன். உங்கள் தத்துவ வகுப்புகள் விஷ்ணுபுரம் போன்ற நாவல்களை படிப்பதற்கு உதவியாக அமையுமா?

அ.சந்தானம்

https://vishnupuram.com/  நாவல் பற்றிய பார்வைகளுக்காக
விஷ்ணுபுரம் வாங்க

விஷ்ணுபுரம் மின்னூல் வாங்க

அன்புள்ள சந்தானம்,

இந்தியாவின் முக்கியமான படைப்புகள் ல்லாமே இந்தியச் சிந்தனை மரபில் இருந்து கிளைத்தவை. விஷ்ணுபுரம் மட்டுமல்ல, குர்அதுல்ஐன் ஹைதரின் அக்கினி நிதி போன்றவை கூட. அவற்றை புரிந்து கொள்வதற்கு இந்தியத் தத்துவச் சிந்தனை மரபில் ஓர் அறிமுகம் இருப்பது மிகப்பெரிய அளவில் உதவும்.

அவ்வாறு ஆலயக்கலைப் பயிற்சி பெறுவது, தியானப் பயிற்சி பெறுவது, யோகப் பயிற்சி பெறுவது அனைத்துமே விஷ்ணுபுரம் போன்ற நூல்களை, வென்மரசு போன்ற பெரும் படைப்புகளை உண்மையாகவே அறிந்து கொள்வதற்கு உதவியானவை.

அதிதன் நடத்தும் மேலைத்தத்துவ வகுப்பு என்பது நாம் படிக்கும் அத்தனை மேலை நாட்டு இலக்கியங்களையும் மேலும் துல்லியமாக புரிந்து கொள்ள உதவுவதை எவரும் உணர்ந்து கொள்ள முடியும். ஆகவே தான் இந்த வகுப்புகளை ஒருங்கிணைக்கிறோம்.

ஜெ

முந்தைய கட்டுரைவாசிப்பின் வெற்றி- கடிதம்.