மருத்துவப்பயிற்சி, கடிதம்

வணக்கம் .

வீட்டில் இரண்டு மருத்துவர் களை வைத்துக்கொண்டு, தினமும் மருத்துவம் பற்றிய செய்தியை  கேட்டுக் கொண்டும், இருந்த எனக்கு தங்களின் நவீன மருத்துவம் வகுப்பினை கேட்க விழைந்து வெள்ளிமலை வந்தடைந்தேன்

ஒரு பெரிய பொக்கிஷத்தினை, நகைச்சுவையாகவும்  மிக எளிமையாகவும் நேர்த்தியாகவும் கூற முடியும் என்பதனை மருத்துவர் மாரி ராஜ் மூலம் உணர முடிந்தது

முழுமையாக எனது சந்தேகங்கள் அவரின் மூலம் ஒரு தகவலை பெற்றுக் கொண்ட பின் அவரை வாழ்த்தவும் அவர் நீண்ட காலம் வாழ வேண்டும் எனவும் உள்ளம் வேண்டியது.

மருத்துவர்கள் பல ஆண்டு படித்த செய்தியினை, இவ்வளவு எளிமையாக மருத்துவர் அல்லாத ஒருவர் புரிந்து கொள்ளும்படி இரத்தின சுருக்கமாகவும், செய்திகள் விடுபடாமலும் கூறியதும் ஒவ்வொரு உறுப்பின் தனித்துவமும், அதன் செயல்பாடுகளும் , அவை ஒவ்வொன்றும் தமக்குள் எவ்வாறு தகவல்களை கொண்டு சென்று உதவி கொள்கிறது என்பதனை சிறு சிறு உதாரணத்துடன் புரிய வைத்ததற்கு மிகப்பெரிய அப்ளாஸ் மருத்துவருக்கு.

வகுப்பில் இரண்டரை நாட்களும் ,விழிப்போடு அனைவரையும் கேள்வி பதில் கேட்டு, சாக்லேட் கொடுத்து, எங்களின் 12 ஆம் வகுப்பின் அறிவியல் பாடத்தினை நினைவு படுத்தியதும் ,

நவீன மருத்துவ தகவல்களை எவ்வித இடைச் செருகள் இன்றி கொண்டு சென்றது டாக்டரின் உயரிய சிந்தனையும் அறிவாற்றலும் தான் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை.

சென்னையில் இருந்து வந்த பாரதியின் இரு மகள்களின் இறைவணக்க பாடலும்  அந்தியூர் மணி அண்ணாவின் கவனிப்பும், உணவு சமைத்துக் கொடுத்த அம்மாவின் கை மணமும், தங்களின் நித்திய வன இடத் தேர்வும் 

ஒரு மனிதன் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்களை கொடுக்க வேண்டும் என எண்ணி இதனை  நிகழ்த்தும் தங்களையும் எண்ணி மீண்டும் மீண்டும் பயிற்சிகள் என்னை அழைக்கினறன  அன்பு சகோதரா.

பிரியமுடன்,

தேவராணி அசோகன்

கள்ளக்குறிச்சி.

முந்தைய கட்டுரைநித்ய சைதன்ய யதி
அடுத்த கட்டுரைநவீன மருத்துவம், கடிதம்