மரபு எதற்காக?

அன்புள்ள ஜெ,

மரபிலக்கியப் பயிற்சி பற்றிய அறிவிப்பைக் கண்டேன். இன்றைய சூழலில் மரபிலக்கியத்தை ஒரு நவீன வாசகனாக நான் ஏன் கற்கவேண்டும் என்று தெரியவில்லை. உங்கள் குறிப்பை வாசித்தேன். மரபையோ, மதத்தையோ அறிவதற்காகக் கற்கவேண்டும்.  ஆனால் அவற்றில் எனக்கு ஆர்வமில்லை.

சதா

தமிழ் மரபிலக்கிய வாசிப்புப் பயிற்சி

அன்புள்ள சதா

மரபில், நேற்றில், முற்றிலும் ஆர்வமில்லை என்கிறீர்கள். சரி. ஆனால் உங்களிடமுள்ள மொழி நேற்றில் இருந்து வருவது அல்லவா? உங்கள் உள்ளம் நேற்றின் தொடர்ச்சி அல்லவா?

நேற்றை முற்றிலுமாக விலக்கி, இன்றை மட்டுமே கருத்தில்கொண்டு மொழியையும் உள்ளத்தை அணுகுகிறீர்கள் என்றே கொள்வோம்.அப்போதுகூட சொற்கள், படிமங்கள் ஆகிய இரண்டையும் கற்றே ஆகவேண்டும் இல்லையா?

நீங்கள் இன்று பயன்படுத்தும் ஒரு சொல்லை அறியவேண்டும் என்றால் மரபிலக்கியப்பயிற்சி தேவை. நீங்கள் காணும் ஒரு கனவைப் புரிந்துகொள்ளவேண்டும் என்றாலும் மரபிலக்கியப் பயிற்சி தேவை. இன்றைய சமூகவியலை, அரசியலைப் புரிந்துகொள்ளவும் மரபிலக்கியப் பயிற்சி தேவை

ஜெ

முந்தைய கட்டுரைராஜாவா ரஹ்மானா?
அடுத்த கட்டுரைஉளச்சோர்வின் ஊற்றுக்கண்