தத்துவத்தின் அடித்தளம்

அன்புள்ள ஜெ

இன்றைய வாழ்க்கையில் இருந்து 3000 ஆண்டுகள் பழமையான சிந்தனைகளுக்கு இன்று என்னதான் பொருள் இருக்க முடியும்? அவற்றின் வளர்ச்சிதான் இன்றைய சிந்தனை என்று சொல்லலாம். ஆனால் அதை இன்றுள்ள நிலையிலேயே கற்கமுடியுமே? ஏன் பழைய காலத்திற்குச் சென்று கற்கவேண்டும்? பழைய கால வாழ்க்கைமுறையை அறிந்துகொள்ளாமல் அந்தச் சிந்தனைகளைக் கற்பதனால் என்ன பயன்?

ரவிக்குமார்

அன்புள்ள ரவிக்குமார்

ஒரு சிந்தனைமுறையின் ஒரு பகுதியை மட்டும் அறிந்துகொள்வது முழுமையாக அறிவதாகாது. இன்றில் இருந்து தொடங்கி சிந்தனையில் ஈடுபட்டால்கூட படிப்படியாக சாக்ரடீஸை நெருங்கிச் செல்லவேண்டியிருக்கும். அதைவிட சாக்ரடீஸில் இருந்தே தொடங்குவது எளிது, குழப்பம் அற்றது. ஆனால் இது முழுமையாகச் சிந்தனையைக் கற்பவர்களுக்குத்தான். அதில் ஏதேனும் ஒரு பகுதியுடன் இணைந்து, ஒரு குறிப்பிட்ட அளவு மட்டுமே தெரிந்துகொண்டு, உழைப்பவர்களுக்கு இந்த முழுமையான அறிதல் தேவையில்லை. உதாரணமாக, டாக்டர்கள் அரிஸ்டாடில் உருவாக்கிய தர்க்கமுறையில்தான் செயல்படுகிறார்கள். மருத்துவம் செய்ய அவர்கள் நவீன மருத்துவத்தைக் கற்றால்போதுமானது. அரிஸ்டாடிலை தெரிந்திருக்கவேண்டியதில்லை. ஆனால் நவீன மருத்துவத்தின் அடிப்படைக்கொள்கைகளைப் புரிந்துகொள்ள அரிஸ்டாடில் வரைச் சென்றாகவேண்டும். அரிஸ்டாடிலை கற்க சாக்ரடீஸில் இருந்து தொடங்கவும் வேண்டும்

ஜெ

முந்தைய கட்டுரைதத்துவமும் காணொளிகளும், ஒரு கேள்வி
அடுத்த கட்டுரைகோயில்கள் வெறும் கலைச்செல்வங்களா?