ஜெர்மானிய தத்துவம், கடிதம்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு

இந்திய தத்துவம் உள்நோக்கியதாகமேற்குலக தத்துவங்கள் வெளி நோக்கி பரவுவதாக பரிணாமம் அடைந்தது என்று குறிப்பிட்டு இருந்தீர்கள்

இதை கண்கூடாக ஜெர்மனிய தத்துவ  பயிற்சி வகுப்பில் அறிய முடிந்தது.  

ஆரம்ப வகுப்பே மிகச் சிறந்ததாக இருந்தது. தற்சமயம் அறிவியல் எதிர்கொள்ளும் முன்னகர முடியாத தடைகளும் அதன் விளைவாக தத்துவம் எவ்வாறு உள்ளே வந்தது என்பதிலிருந்து ஆரம்பித்தார் அஜிதன். இன்றைய சயின்டிபிக் ரேஷனல் மைண்ட்  சென்றடையும் தடைகள் , theory of relativity  vs quantum mechanics விளக்கங்களைக் கொடுத்து எவ்வாறாக அது தத்துவத்தை நோக்கி செல்கிறது என்று ஆரம்பித்து வைத்தார். Igniting spark  in the minds என்பதை  வகுப்பில் இருந்தவர்கள் உணர்ந்தோம்அதில் தொடங்கி வரிசையாக   தத்துவயியல் எவ்வாறு உருமாற்றம் அடைந்ததும் , மறுமலர்ச்சி காலகட்டம்  வழியாக சமூகவியல், அரசியல், அறம் சார்ந்த மாற்றங்களும் தெளிவாக விவரிக்கப்பட்டதுநாம் அடிக்கடி  உபயோகிக்கும் freewill  உருவாகி வந்த விதம், கலைகளில்/ இசைகளில் தத்துவ தாக்கம் எவ்வாறு புகுந்தது, மார்க்சியத்திற்கு  தத்துவத்தின் அடிப்படை யும் முன்வைக்கப்பட்டது.

மிகச்செரிவான உரைகள்

நான் முதல் முதலில் தலாய்லாமாவின் புத்தகத்திலிருந்து தான் அறிவியலின்  அடிப்படைச் சிக்கலான quantum vs relativity பற்றி தெளிவாக அறிந்தேன். அடுத்த கட்ட  புரிதலாக, அறிவியலுக்கு தத்துவம் எவ்வாறு துணை போகிறது என்பதை ஆசிரியர் அஜிதன்  மூலமாக அறிய முடிந்தது. மூன்று நாட்களுமே ஒரு சிறு தொய்வு கூட இல்லாமல் முழுமையான அர்ப்பணிப்புடன் வகுப்புகள் நடத்தினார். எழுத்தாளராக அறியப்பட்டிருந்த அஜிதன் மிக சிறந்த தத்துவ ஆசிரியராக  வெளிப்பட்டார். வாழ்த்துக்கள்

 

Unified wisdom  என்று நான்  நினைப்பது உள்நோக்கிய இந்திய தத்துவம், வெளிநோக்கி பரவும் மேலை தத்துவம் , மூளை செயல்பாட்டின் வழியாக அறியும் consciousness. நியூரோ சயின்ஸ் வகுப்புகளும் அமைக்கப்பட்டால் இந்த வட்டம் முழுமை பெறும்.

வாய்ப்புகள் கொடுத்ததற்கு மிக்க நன்றி

அன்புடன்,

மீனாட்சி

பி.கு

அறிமுகம் செய்யப்பட்ட ஜெர் மானிய தத்துவவாதிகள் பலரும்  ஜனா என்ற பல்கலைக்கழகத்தில பயின்று வந்தவர்கள், அதனால் ஜனா என்னும் ஊரின் சிறப்பு பற்றி பேசிக் கொண்டிருந்தோம். வகுப்புகள் முடிந்து கிளம்பும்போது தான் தெரியவந்தது ஜனா பல்கலைக்கழகத்தில் படிக்கும் ஒரு ஆய்வு மாணவரும்  எங்களுடன் இந்த வகுப்பில் இருந்தார் என்று.

முந்தைய கட்டுரைமூளையலைவுகள்
அடுத்த கட்டுரைபுதுக்கோட்டை ஆலயப் பயணம் – கடிதம்