அந்த சிலர்

முழுமையறிவு அனைத்துக் காணொளிகளும்

அன்புள்ள ஜெமோ

உங்கள் காணொளிகளை கண்டு வருகிறேன். சமகாலத்துப் பிரச்சினைகளை பேசாமல் எங்கோ கோபுரத்தில் அமர்ந்துகொண்டு பேசிக்கொண்டிருக்கிறீர்கள். ஆகவேதான் இவற்றுக்கு மிகப்பெரிய புறக்கணிப்பு உள்ளது. சில காணொளிகளை ஆயிரம்பேர்கூட பார்க்கவில்லை. உங்கள் தளத்தின் சப்ஸ்கிரைபர்களே ஐந்தாயிரம். ஆனால் எந்த காணொளிக்கும் ஐந்தாயிரம் வியூஸ் கிடையாது. ஏனென்றால் இவை எல்லாம் இன்றைய வாழ்க்கையுடனும் இன்றைய பிரச்சினைகளுடனும் சம்பந்தமே அற்ற டிராஷ் என்பதுதான்

ரவிக்குமார் மாதவ்

அன்புள்ள ரவிக்குமார் மாதவ்

தமிழகத்தில் சமகாலப் பிரச்சினை என்பது சினிமா மட்டும்தான். வேறு எதை எவர் பேசினாலும் எவரும் செவிகொடுக்க மாட்டார்கள். சினிமா விமர்சனம் செய்தால் லட்சக்கணக்கான ஹிட்ஸ் வரும். அதைப்பேச பலநூறுபேர் உள்ளனர். அரசியல்வாதிகள்கூட சினிமாவிமர்சனம் செய்கிறார்கள். நீங்கள் பார்க்கிறீர்கள். இப்படி ஒரு சில விஷயங்களும் வெளியே நடக்கட்டுமே. உண்மை, மிகக்குறைவாகவே இதைப் பார்க்கிறார்கள். ஆனால் எனக்கு எண்ணிக்கை எப்போதுமே பெரிய விஷயம் அல்ல. நான் செய்வனவற்றைச் சரியாகச்  செய்யவேண்டும். செய்யவேண்டியவற்றைச் செய்யாமலிருக்கக் கூடாது. அவ்வளவுதான்.

ஜெ

 

முந்தைய கட்டுரைஅமெரிக்காவில் தமிழ் எப்படி வாழும்?