மலைத்தேன் – யோகேஸ்வரன் ராமநாதன்

அன்பின் ஜெ,

) : ”இதை எதற்கு நான் செய்யவேண்டும்..”
) : “இதை எதற்கு இன்றைக்கே செய்தாகவேண்டும்..”

அலுவலக மெய்நிகர் சந்திப்புகள் முடியும்போது, செய்ய வேண்டியவை என்று தலைப்பிடப்பட்ட நீள் பட்டியல் ஒன்று உருவாகி வருகையில் கூடவே இந்த இரு கேள்விகளும் தவறாமல் சேற்றுக்குமிழிகளென வெடித்தெழுந்து, மனதை மேலும் கலங்க வைக்கும்


உங்கள் இடத்தில்  நான் இருந்தால் வேலையை எவ்வளவு எளிதாக, எவ்வளவு குறைந்தபொழுதில் செய்து முடித்து விடுபடுவது என்பதையே நான் கவனிப்பேன். அதற்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவு குறைவாக என் உள்ளத்தை அளித்து எவ்வளவு முடியுமோ அவ்வளவு சிறப்பாக செய்யவே முயல்வேன். அதைச் சிக்கலாக்கிக் கொள்ளும் எதையும் செய்யமாட்டேன். ஆகவே அதில் ஆணவத்தை கலக்க மாட்டேன். அந்தக் களத்தில் உறவுச் சிக்கல்கள், பூசல்களை இழுத்துப்போட்டுக்கொள்ள மாட்டேன்.”

அலுவலக கணினித்திரைக்கு முன்பாக நான் வைத்திருக்கும் உங்களின் வரிகள். [நாணயத்தின் மதிப்பு | எழுத்தாளர் ஜெயமோகன்அலுவலக சூழல் அளிக்கும் அழுத்தத்தில் இருந்து சற்றேனும் விடுபட இவ்வரிகளை ஒரு நாளில் பலமுறை வாசிப்பதுண்டு.


உளக்குவிப்பு எவ்வளவு முக்கியம் என்பதை பல்வேறு தருணங்களில்https://www.jeyamohan.in/209037/  – சில மாதங்களுக்கு முன்பான அமெரிக்க பயணத்தில் பதிவு செய்யப்பட்ட  இந்த காணொளி வரை) உணர்த்தியபடி இருப்பீர்கள்.

நவம்பர் மாத இறுதியில் நடைபெற்ற திரு.தில்லை செந்தில் பிரபு அவர்களுடைய  உளக்குவிப்புதியான பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டேன்.  அகம் அடங்கிக் கொண்டே செல்வதை அருகிலென உணரமுடிந்த மூன்று நாட்கள்.

தியானம் தேவையா?, குருமார்கள் தில்லை செந்தில் பிரபுசௌந்தர் அளிக்கும் பயிற்சிக்கான ஆறு வித்தியாசங்கள் என்ன?.. கூடுதலாக அமலன் அளிக்கும் அகவிழிப்பு தியானத்திற்குமான மேலதிக வித்தியாசங்கள் என்ன? என்று கேட்டபடி கடிதங்கள் வந்து கொண்டே இருந்தாலும், வகுப்புகளில் பங்குபெற்று பலனடைந்த நண்பர்களின் எண்ணிக்கை அதிகம்.

முழுமையறிவு முன்னெடுப்பின் பயிற்சி வகுப்புகள் அனைத்தும் அவற்றிற்கு உரிய தனித்தன்மையோடு அமைந்துள்ளதை நினைக்கையில் அவ்வாறில்லாமல் வேறு எப்படி இருக்க முடியும் என்று நினைத்துக் கொண்டேன்.

ஜூலை 13, 2022 அன்று  புலர்காலை பொழுதில் திறப்புவிழா கண்ட  ”குருநித்யா மீட்டிங் ஹால்”  கடந்த 29 மாதங்களில்  கண்டிருக்கும் பயிற்சி வகுப்புகளை பற்றியும்,  மலைத்தேனாய் மாறிவரும்  முழுமையறிவு வகுப்புகள் பற்றியும் மனதில் தொகுத்தபடி இருக்கிறேன்.

நட்புடன்,
யோகேஸ்வரன் ராமநாதன்

முந்தைய கட்டுரைஎழுத்தாளர்களின் அறை
அடுத்த கட்டுரைசிறுவர்களுக்கு யோகப்பயிற்சிகள்