மதம், மனிதப்பரிணாமம், கடிதம்

ஆசிரியருக்கு,

முழுமையறிவுக்கு தாங்கள் கொடுக்கும் விளக்கங்கள் அனைத்தும் அறிவுப்பூர்வமானவை.என் கல்லூரி நாட்களில் நான் படித்த கார்ல் மார்க்ஸ் நினைவுக்கு வந்தார். அவருடைய பொருள் சார்ந்த சமூகம் (Materialistic Interpretation of society) இன்றும் நடப்பில் உள்ளது.உள்ளவன், இல்லாதவன் தான் எல்லா மதத்திலும் ,சமுதாயத்திலும்  உள்ள சாதி.இதற்கும் மதத்திற்கும் சம்பந்தமில்லை.அதிகாரம் மதத்தையும் ,சாதியையும்  பற்றிகொண்டுள்ளது.தக்கலை பீர் முகமது எழுதிய மெய்ஞான சரநூல், இந்துக்களின் சரநூல் சாஸ்திரம்,ஜீஸஸ் பயன்படுத்திய  கிரியா யோகா எல்லாம் ஒரே நேர்கோட்டில் விழுகிறது.நம் வசதிக்காக சாதி அடுக்குகளை உருவாக்கிக்கொண்டோம்.

புதிய சமுதாய அடுக்கு சின்ன சின்ன கார்ப்பரேட் கைகளில் உள்ளது.(Corporate hierarchy) இந்த அமைப்பு அரசாங்கத்தை விட  அதிகாரம் நிறைந்தது.Capitalism என்ற முதலாளித்துவத்தை நோக்கி நம் நாடு நகர்ந்து கொண்டு வருவது உண்மை.ஆனால் இதில் நாம் சமாத்துவத்தை காண மீண்டும் முதலாளி தொழிலாளி உறவு நன்றாக இருக்க வேண்டும்.சில ஆண்டுகள் ஆகலாம். விரிந்த மனப்பான்மை,அகலமான மானுடகண்ணோட்டம்,எல்லாவற்றையும் பற்றிய முழுமையறிவு இவைகள் தேவை.இது வருங்காலத்திற்கு அவசியம் தேவை என்பதை இரு தரப்பினரும் உணர்ந்து வரும் காலமிது.பொய்யான சாதி,மத  விளக்கங்கள் இனி நிற்காதுஅவற்றில் கூறப்பட்ட உண்மை அறிவே மிகும். காரணம் உற்பத்தி,சந்தைப்படுத்துதல்,வாடிக்கையாளர்கள்,விற்பனையாளர்கள் என்ற வணிக உறவுகள் மேலோங்கும் போது இதர சமூக அமைப்புகளான மதம்,சாதி இவற்றின் தன்மை மாறுபடும்.உண்மை மெய்ஞானத்தை உணர்ந்த ஒவ்வொரு முதலாளியும், தொழிலாளியும் தான் புதிய சமூகத்தை கட்டமைக்க போகும் காரணிகளாக இருப்பார்கள்.

தா.சிதம்பரம்

முந்தைய கட்டுரைமரபிலக்கியப் பயிற்சியின் பயன்
அடுத்த கட்டுரைமானுடப்பரிணாமம், ஒரு புனைவு