அன்புள்ள ஆசிரியருக்கு,
வணக்கம். விஷ்ணுபுரம் விருது விழாவின் வீடியோக்களை சுருதி டிவியில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. இயல். இசை, நாடகத்தில் இயலுக்கு, இசைக்கும் ஏற்கனவே விஷ்ணுபுரம் குழுவினர் பெரும் பங்களித்து வரும் நிலையில் இந்த முறை நாடகத்துக்கும் இடம் சேவை செய்ய தொடங்கியதை கண்டதும் பெரும் மகிழ்ச்சி வருகின்றது. இரா.முருகன், ரம்யா, கோபாலாகிருஷ்ணன் ஆகியோரது உரைகளும் , உங்கள் உரையும் கேட்க சுவையாகவும், மனதிற்கு இனிமையாகவும் இருந்தது.
மனித பண்பாடு உருவாகி வந்த வழி வீடியோவை முழுமை அறிவு தளத்தில் வீடியோ பார்த்தேன். அதிகாரம் என்பதை ஒரு வாளும், மதக்கோலும் ஏந்திய மனிதனாக , லைவையாதன் என பெயரிட்டு நாம, ரூபம் அமைத்து ஆங்கிலேய அறிஞர் 17ம் நூற்றாண்டில் தாமஸ் ஹாப்ஸ் எழுதிய புத்தகம் ஒன்றினை மையமாக கொண்டு ஒரு புனைவை எழுதினேன். இது கற்பனை வழியாக அதிகாரம் என்பதை தனித்து வெளியே காண உதவி செய்கின்றதோ? இதன் வழியாக அதிகாரத்தினை பரிபாலானம் செய்ய வழிகளை கற்றுக் கொண்டார்களோ என்றேல்லாம் கேள்விகள் வந்தன.
இந்தக் கேள்விகளை புரிந்துக் கொள்ள புனைவை பயன்படுத்தினேன். ஆசிரியரின் மேலான பார்வைக்கு அனுப்பி வைக்கின்றேன். புனைவாக சொல்லிக் கொள்கையில் இந்திய சூழலில் வளர்க்கப்பட்டு இன்று அமெரிக்க சூழலில் ஜீவனம் செய்யும் எனக்கு என் எல்லைகள், தெரிந்துக் கொள்ள வேண்டிய விஷயங்களுக்கு இட்டுச் செல்லும் என நினைக்கின்றேன்.
பேருடலாகும் சிற்றுடல்கள் – லெவையாதன்
அன்புடன்
நிர்மல்